பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் f 3 கருத்துக்களை ஒழுங்கு படுத்தத் துணை புரிகின்றது; வலிவற்றுக் கிடக்கும் ஒரு சில கருத்துக்களே வலியுறச் செய்கின்றது. மக்கட் சமுதாயத்தில் நிலவும் கருத்துக்கள் ஒழுங்கு பெற்று இலக்கிய ஆசிரியன் படைக்கும் நூல்கள் வாயிலாக வெளிப்படுங்கால் அவை ஒரு புதிய வீறுடன் மீண்டும் மக்கட் சமுதாயத்தை அடை கின்றன; சமுதாய வாழ்வுடன் ஒன்றியும் விடுகின்றன. எனவே, சமுதாய வாழ்வே புத்துயிர் பெற்றுப் புதிய ஊட்டத்தை அடை கின்றது. இப்புதிய ஊட்டம் இன்னும் பல புதிய இலக்கியங்கள் தோன்றுவதற்கும் காரணமாகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தோத்திரப்பாக்கள் எழுந்த காலம், காவியங்கள் தோன்றிய காலம், சிற்றிலக்கியங்கள் இயற்றப்பெற்ற காலம் ஆகிய கால எல்லேகளை ஆராய்ந்தால் இவ்வுண்மை நன்கு புலணுகும். இக் கருத்துக்களின் அடிப்படையில் "கலிங்கத்துப்பரணி"யை ஆராய்தல் வேண்டும் ; நோக்க வேண்டும். பரணி நூலின் உறுப்புக்கள் : இனி, பரணிப் பனுவலின் உறுப்புக்களைப்பற்றிப் பகர விரும்புகின்றேன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற பழமொழியின் ஊற்றத்தைத் தமிழ்க் கவிஞர்களிடம் தாராளமாகக் காணலாம். எனவே, கடவுள் வாழ்த்து இன்றி எத்தமிழ் நூல்களேயும் காண்டல் அரிது. ஆகவே, கடவுள் வாழ்த்து முதல் உறுப்பாக அமைகின்றது. இவ்வுறுப்பு ஈண்டு மிக விநோதமாக அமைக்கப்பெற்று இருக்கும். நூல் இனிது முடிய இறைவனே வாழ்த்தாமல் நூலால் போற்றப் பெறும் தலைவன் வெற்றிபெற வாழ்த்தப்பெறும் பெற்றியை இங்குத்தான் காணலாம். இரண்டாவது உறுப்பாக அமைவது 'கடை திறப்பு’. நூலில் கூறப்பெறும் வென்றிச் சிறப்பைப் பாடுவ தற்கு மாற்ருர் தேயத்தினின்றும் கொணர்ந்துள்ள மகளிரையும் பிறமகளிரையும் வாயிற்கதவைத் திறந்து வரும் வண்ணம் அழைப் பதாக இப்பகுதியில் கூறப்பெறும் வீரச்செயல்களும் வெற்றிச் செயல்களும் நிகழ் காலத்தவை என்று ஒரு சாரார் கூறுவர்; கடந்த காலத்தவை என்று பிறிதொரு சாரார் பகர்வர். ஆளுல் இன்று நமக்குக் கிடைக்கும் பரணி நூல்கள் அனைத்தையும் நோக்கிளுல் இவை முக்காலத்தையும் பற்றியவை என்பது தெளி வாகப் புலணுகும். எடுத்துக்காட்டுக்களாக கலிங்கத்துப் பரணியில் வரும் நிகழ்ச்சிகள் நிகழ்காலத்தைச் சுட்டுகின்றன; ஒட்டக் கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியில் வருபவை இறந்த காலத்தைப்பற்றியவை ; வைத்திய நாத தேசிகரால் இயற்றப் பெற்ற பாசவதைப் பரணியிலுள்ளவை எதிர்காலத்தவையாகும். இவ்வுறுப்பு, கடவுள் வாழ்த்தைப்போல் புற உறுப்பு என்று