பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4 பரணிப் பொழிவுகள் கூதுவாகும் உள்ளனர். அடுத்து வரும் காடு பாடியது என்னும் உறுப்பில் புறங்காட்டைப்பற்றிய வருணனை புலப்படும். இது புறத்தினத் துைைவகையுள் ஒன்ருகிய காடு வாழ்த்து என்ப தைச் சார்ந்ததாகும். இதனே அடுத்து வரும் கோயில் பாடியது” என்பதில் தேவியின் திருக்கோயில் வருணனையைக் காணலாம். இதனை அடுத்து வரும் தேவியைப் பாடியது என்பதில் அன்ஆனயின் பெருமை அறையப்பெறும். இவ்வுறுப்பு காளி நிலை’ என்றும் கழறப்பெறும். பேய்களைப் பாடியது என்னும் பகுதியில் பேய்களின் இயல்பு கூறப்பெறும். இது கூளி நிலை’ என்றும் வழங்கப்பெறும். இதனைத் தொடர்ந்து வரும் பேய் முறைப் பாடு என்பதில் தேவியிடம் பேய்கள் தம் குறைகளைக் கூறி முறை விடுவதைக் காணலாம். பின்னர் வரும் காளிக்குக் கூளி கூறியது' என்னும் பகுதியில் போர் வரலாறும் வெற்றியும் இயம்பப்பெறும். இதனைத் தொடர்ந்து வரும் போர் பாடியது', 'களம் பாடியது. வாழ்த்து முதலிய பகுதிகள் வரும். ஒவ்வொரு பரணியிலும் இங் வுறுப்புக்கள் முறை மாறி அமைக்கப்பெறுதலும் உண்டு. இதனே, "கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல் கடும்பாலே கூறல் கொடுங்காளி கோட்டம் கடிகனம் உரைத்தல் காளிக் கதுசொலல் அடுபேய்க் கவள்சொலல் அதல்ை தலைவன் வண்புகழ் உரைத்தல் எண்புறத் திணையுற வீட்டல் அடுகளம் வேட்டல்' தான் இலக்கண விளக்க நூற்பாப் பகுதியாலும், ‘'தேவர் வாழ்த்தே க.ை நிலே பாலே மேவி அமரும் காளி கோயில் கன்னியை ரத்தல் அலகை விநோதம் களுதிலே நிமித்தம் பசியே ஒகை பெருந்தேவி பீடம் அழகுற இருக்க அமர்நிலை நிமித்தம் அவள் பதம் பழிச்சா மன்னவன் வாகை மலேயும் அளவு மரபினி துரைத்தல் மறக்களம் காண்டல் செருமிகு களத்திடை அடுகூழ் வார்த்தல் 16. இலக்கண விளக்கம்-நூற்பா 467