பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 15 பரவுதல் இன்ன வருவன பிறவும் தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே.” ? என்ற பன்னிரு பாட்டியல் நூற்பாவினுலும் அறியலாம். கலிங்கத்துப்பரணி தோன்றிய காரணம் : இனி, கலிங்கத்துப் பரணி என்ற இந் நூல் தோன்றியதன் காரணத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். கலிங்கப் போர் நிகழ்ந்த ஒரு சில நாட்கள் கழித்து அரசவையில் குலோத்துங்கனும் அவனுடைய அவைப் புலவராகிய சயங்கொண்டாரும் உரையாடிக் கொண்டிருந்தனர். பேச்சின் இடையில் புவியரசன் கவியரசனே நோக்கி வேடிக்கையாக கவிஞரேறே, கலிங்க நாட்டைச் சயங் கொண்டமையால், யானும் தங்களைப்போல் சயங்கொண்டான் ஆயினேன் ' என்று கூறினன். அதனைச் செவிமடுத்த கவிஞர் கோமான், * அங்ஙனமாயின், சயங்கொண்டானேச் சயங் கொண்டான் பாடுதல் சாலப் பொருத்தமாகும் ' என்று மறு மாற்றம் உரைத்து இந்நூலேப் பாடி முடித்தாக ஒரு செவிவழிச் செய்தியால் அறிகின்ருேம். இந்நூலின் அரங்கேற்றம் நிகழுங்கால் அந்நூலின் சொற்சுவை பொருட்சுவைகளே நன்கு அநுபவித்த மன்னன் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காயை உருட்டி அவரையும் அவரது நூலேயும் சிறப்பித்தான் என்றும் அச் செவிவழிச் செய்தியாலேயே அறிகின்ருேம். இதில் உண்மை உண்டோ, இல்லையோ கேட்பதற்கு இனிமையாயுள்ளது என் பதை நாம் அனைவரும் ஒருமனமாக ஒப்புக்கொள்வோம். இல்லையா ? பின்னுெரு சமயம் கவிஞரும் மன்னனும் உரையாடிக்கொண் டிருந்தனர். அப்பொழுது தன் நூலினேப் பாராட்டி அரசன் அளித்த நிலையாப் பொருட் கொடையினும் தான் மன்னனுக்கு நல்கிய நிலத்த புகழ்க் கொடையே பல்லாயிரம் மடங்கு பெரிது என்று சொன்னதாகவும் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது. * காவலர் ஈகை கருதுங்கால் காவலர்க்குப் பாவலர் நல்கும் பரிசு ஒவ்வா-பூவில்நில யாகாப் பொருளே அபயன் அளித் தான்புகழாம் ஏகாப் பொருள் அளித்தேம் யாம். ' என்ற தமிழ் நாவலர் சரிதையில் காணப்பெறும் வெண்பாவே இதற்குச் சான் ருகும். சோழன் தனக்குச் செய்த சிறப்பு சிறிது 19. பன்னிருபாட்டியல்-நூற்பா 58 20. தமிழ் நாவலர் சரிதை-செய். 118.