அறிமுகம் 17 என்பது திருமால் வணக்கத்தைக் கூறும் தாழிசைகளாகும். திருமாலின் உதரம் உலகங்களையெல்லாம் அடக்கியது போல் அபயனின் குடை உலகங்களை அடக்கி வாழட்டும் என்று வாழ்த்துகின் ருர். அபயன் உலகம் முழுவதையும் காப்பது ஈண்டுக் குறிப்பிடப்பெற்றுள்ளது. அடுத்து வரும் இரண்டாவது பகுதி கடை திறப்பு.இஃது இன் சுவை மிக்க பகுதி. இதனே அடுத்து வரும் அடுத்த வாரச் சொற் பொழிவில் தனியாக விளக்க எண்ணியுள்ளேன். சொற் சுவையும், பொருட்சுவையும், கற்பனை நயமும் செறிந்த இப்பகுதியை நன்கு துய்க்க வேண்டும் என்றே இதற்கெனத் தனியாக ஒரு சொற் பொழிவு அமைத்துள்ளேன். கலிங்கப் போர்மேற்சென்ற வீரர்கள் மீண்டுவரக் காலந் தாழ்த்தினராகவும், அது கண்ட அவர் காதல் மகளிர் ஊடல்கொண்டு கதவடைத்தாராகவும் கொண்டு, கவிஞர் தாம் பாடப்போகும் அக்கலிங்கப்போரின் சிறப்பைக் கேட்டுமகிழு மாறும், அதன்பொருட்டுக் கதவினத் திறக்குமாறும் வேண்டுவ தாக இப்பகுதி அமைக்கப்பெற்றுள்ளது. மூன்ருவது பகுதி காடு பாடியது” என்பதாகும். இதில் காளி தேவி உறையும் இடமாகிய பாலைநிலத்தைச் சார்ந்த காட்டின் இயல்பு விரித்துக் கூறப்பெறுகின்றது, அக்கானில் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமாட்டாது பொரிப் பொரியாய்ப் போன காரைச் செடிகளும், சூரைச் செடிகளும், பல்வேறு செடிகளும் மரங்களுமே எம்மருங்கும் காட்சி அளிக்கின்றன. பருந்துக்களும், புருக்களும் மான்களும் ஆங்காங்குச் சில இடங்களில் காணப்பெறு கின்றன. ஒவ்வோரிடங்களில் மரப் பொந்துக்களில் பாம்புகள் தலை நீட்டிக்கொண்டுள்ளன. ' வற்றியபேய் வாயுலர்ந்து வறன்.நாக்கை நீட்டுவபோல் முற்றிய நீள் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே”. ' (வறன்.நாக்கு-வறண்ட நாக்கு; பொதும்பு-பொந்து) என்ற தாழிசையால் தலைநீட்டி நிற்கும் பாம்பின் காட்சி வருணிக் கப்பெற்றிருத்தல் காண்மின். மேலும், அக்காட்டில் கானல் நீர் எங்கும் காட்சி அளிக்கின்றது. நாகங்கள் உமிழ்ந்த மணிகளும் மூங்கில்கள் உதிர்த்த முத்துக்களும் ஆங்காங்குச் சிதைந்து கீழே வீழ்ந்து காணப்பெறுகின்றன. 21. தாழிசை-89. 2
பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/25
Appearance