பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 8 பரணிப் பொழிவுகள் கோயில் பாடியது' என்ற பகுதி நான்காவதாகும். இதில் அன்னே உறையும் திருக்கோயிலுக்கு அடிப்படை அமைத்ததும், கவர் அடுக்கியதும், துரண் நிறுத்தி உத்தரம் சமைத்ததும், கூறையில் துலாம் அமைத்துப் பாப்பரப்பியதும், நாசிகை இயற்றி யதும், கூரைவேய்ந்ததும், கோபுரமும் மதிலும் இயற்றியதும், மகர தோரணம் வின்த்ததும், கொடி முதலாகப் பல பொருள்களைச் சுற்றிலும் கட்டி அணி செய்ததும், தேவிக்கு ஊசல் அமைத்ததும், கோயிலின் முன்றிலில் அலகிட்டு நீர்தெளித்துப் பூச்சிந்தி விளக் கேற்றியதுமான செய்திகள் நிரல்படவும் எழிலொழுகவும் கூறப் பெத்துள்ள தன்மை வியத்தற்குரியதாகும். இதன்பின், தேவியை வழிபடும் வீசச் முழக்கம், அன்னையின் முன்னர் வேள்வி வணக்கும் இயல்பு, பலிபீடத்தின் காட்சிகள், உடுக்கையடித்துக் கடப்பன் இடும் முழக்கம் ஆகியவை மிகக் கவர்ச்சிகரமாகக் காட்டப்பெறுகின்றன. சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப் பலியாக உறுப்பரிந்து தருதும் என்று பரவும்.ஒலி கடல்ஒலிபோல் பரக்கு மாலோ’.?? (தறுகண்-அஞ்சாமை, பரவுதல்-துதித்தல் பரக்கும்-பரவும்! என்ற தாழிசையில் வீரர்களின் வழிபாட்டியல்புபற்றிய காட்சி கூறப்பெற்றிருக்கும் முறை அக்காட்சியை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதைக் கண்டு மகிழ்கின்ருேம். அதன் பிறகு காளியின் மெய்காப்பாளர்களாகிய சாதகர், பரிவார மகளி சாகிய யோகினியர் முதலியோர் காளியை வணங்க வரும் காட்சிகள் காட்டப்பெறுகின்றன. அடுத்து, கோயிலின் அருகி லுன்ன மூங்கில்தோறும் அரிந்த தலைகள் தொங்கவிடப்பெறும் காட்சி கூறப்பெறுகின்றது. இறுதியாக கொள்ளிவாய்ப் பேய், பகுத்து, நரி, சுடுகாடு, பிணம், நெருப்பு, செம்பருத்தி, பேய் முதலியன கோயிலைச் சூழ்ந்திருக்கும் இயல்பு இயம்பப்பெறு கின்றது. . தேவியைப் பாடியது' என்ற பகு ந்தாவதாக கின்றது. கண்டு, குதி ஐந்தாவதாக அமை ' உவை.உவை உளஎன் றெண்ணி உரைப்பதென் உரைக்க வந்த அவை அவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம்”.* (மோடி - காளி.) 22. தாழிசை . 109, 23. தாழிசை-121