பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 19 என்று தொடங்கிய கவிஞர் காளிதேவியின் உறுப்பு நலன்களைக் கூறுகின்ருர், தேவி அணிந்துள்ள சிலம்பு, பொட்டு, அவளது கூத்து, கொங்கை, உடை, வயிறு, மேலாடை, கை, உதடு, முகம், காதணி, மாலே என்பவற்றின் சிறப்பினே விளக்கி அவளது பேருருவச் சிறப்பினைக் காட்டுகின் ருர்,

  • அண்டமுறு குலகிரிகள்

அவளொருகால் இருகாதில் கொண்டணியின் குதம்பையுமாம் கோத்தணியின் மணிவடமாம் ”.* (அண்டம்-உலகம்: கிரி-மலே; குதம்பை. காதோலை; வடம். மாலை) கைமலர்மேல் அம்மனேயாம்

  • கந்துகமாம் கழங்குமாம் அம்மலைகள் அவள்வேண்டின்

ஆகாத தொன்றுண்டோ? (அம்மனே-ஒரு விளையாட்டுக்கருவி; கந்துகம்.பத்து, கழங்குகழற்சிக்காய்) என்ற தாழிசைகளைப் பன்முறை படித்துப் படித்து அவளுடைய பேருருவத்தை உள்ளத்தில் அமைத்துக் கொள்வோமாக. இப்படி அமைத்துக்கொள்ளுங்கால், -

  • யாது மாகி நின்ருய் - காளி !

எங்கும் நீநிறைந் தாய் ; தீது நன்மை எல்லாம் - நின்றன் செயல்கள் அன்றி இல்லை ”.* என்ற பாரதியாரின் வாக்கில் அந்த ஆதி சக்தியைத் தோத்திரம் செய்யத் தோன்றுகின்றது. இல்லையா ? ஆருவதாக அமையும் பகுதி "பேய்களைப் பாடியது' என்பது. இப்பகுதியில் அன்னையைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் இயல்பு கூறப்பெறுகின்றது. பேய்களின் கை, கால், வாய், வயிறு முழ ந் தாள், உடம்பு, கன்னம், கண், முதுகு, உந்தி,உடன் மயிர், மூக்கு, 24. தாழிசை, 132 25. தாழிசை, 132. - 26. பாரதியார் பாடல்கள் 31. (காளி ஸ்தோத்திரம்)