பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 பரணிப் பொழிவுகள் காது, பல், தாலி, தலை, உதடு என்பவற்றின் தன்மை படிப்போர் ஒயப்புறுமாறு பகரப்பெறுகின்றது. தொடர்ந்து கான் முடப் பேய், கைம்முடப்பேய், குருட்டுப்பேய், ஊமைப்பேய், செவிட்டுப் பே, குறட்பேய், கூன் முதுகுப் பேய் ஆகிய காளியைச் சூழ்ந் திருக்கும் பேய்களைக் கூறும் முகத்தான் அபயனின் வெற்றி மேம் பாட்டைப் புலப்படுத்துவது பெரிதும் போற்றத்தக்க முறையில் இந்திர சாலம் என்ற பகுதி ஏழாவதாக அமைகின்றது. பேய்கள் சூழக் காளி ஆணையிட்டு மெத்தை பரப்பிய கட்டிலின் மீது திருவோலக்கத்திலிருக்கும் போது, நெடும் பேய் ஒன்று காவியை வணங்கி அவளது சீற்றத்திற்கு அஞ்சி இமயம் சென்று மறைத்து வாழ்ந்திருந்த முதுபேய் ஒன்றன் வருகையைத் தெரிவித்துக் காளியைக் காண அது செல்வி பார்த்து நிற்பதைக் கூறுகின்றது. காளியும் இசைவுதற, முது பேய் அன்னையை அணுகி தான் இமயத்தில் உறைந்த போது கந்த இந்திரசாலங்களைக் காளிமுன் காட்டுகின்றது. இப்பகுதியில் வியப்புச் சுவையும் நகைச் சுவையும் நிறைந்து காணப்பெறு கின்தன. இத்த ஏழு பகுதிகளும் பின்வரும் ஆறு பகுதிகளுடன் இயைபுத்து திற்கும் தோற்றுவாய்ப் பகுதிகளாக நன்கு அமைந் துள்ளன. எட்டாவதாக அமைத்துள்ள இராச பாரம்பரியம்' என்ற பகுதியில் குலோத்துங்கன் பிறந்த குடிவழியை இமயத் திணின்றும் மீண்ட முதுபேயின் வாயில் வைத்துப் பேசுகின்ருர் கவிஞர். முதுபேய் இமயத்தில் உறைந்த ஞான்று கரிகாலன் இமயத்தைச் செண்டால் எறிந்து சிரித்து, மீண்டுல் அது நிலை திற்குமாறு கன் புலிக்கொடியைப் பொறித்தான், அவ்வமயம் அவன் போந்த நாரதர் திருமாலே குலோத்துங்களுகப் பிறக்கப் போகும் சோழர் குடி சிறப்புடையது என்று கூறினர். அவர் உரைத்த சோழர் குடிவரலாற்றைக் கரிகாலன் இமயத்தில் எழுது வித்தான். அந்த வரலாற்றையே முதுபேய் காளிக்குக் கூறு கின்றது. ஈண்டு இதிகாச பாத்திரமாகிய நார தரைக் கொண்டு வத்து நிறுத்தி அவர் வாயிலாகத் திருமாலேயும் முதற்குலோத் துங்கனயும் பொருத்தும் கவிஞரின் கலைத்திறம் மிகவும் போற்றி மகிழத்தக்கது. மேலும், நார தரையும் கரிகாலனையும் சந்திக்க வைத்து முனிவர் கூறிய வரலாற்றையே மன்னன் இமயத்தில் பொறித்தான் என்று கூறும் கவிஞரின் கலைத்திறமும் கற்பனைத் திறமும் மிகமிகப் பாராட்டிப் போற்றத் தக்கவை.