பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 21 ‘பேய் முறைப்பாடு” என்ற பகுதி ஒன்பதாக வருகின்றது. குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு, சிறப்பு இவற்றைக் கூறுவ தற்கு முன்பதாகப் பரணிப் போர் நிகழ்வதற்கான நிமித்தங்களைக் கூறும் கவிஞரின் நுண்ணிய திறன் நம்மை இறும்பூது அடையச் செய்கின்றது. முதுபேய் கூறியவற்றையெல்லாம் கேட்டு அன்னே மகிழ்ந்திருந்த அதே சமயத்தில் காளியைச்சூழ்ந்திருந்த அலகை கள் தம் பசிக்கொடுமையை அறிவித்து அதனைப் போக்குமாறு அம்மையை வேண்டி நிற்கின்றன. அப்போது அவை தமக்கு ஏற்படும் சில தற்குறிகளேயும் இயம்புகின்றன.அவ்வமயம், இமயத் தினின்றும் போந்த முதுபேய் தான் கலிங்க நாட்டின் வழியே வருங்கால் ஆங்குக் கண்ட சில தீநிமித்தங்களைக் கூறுகின்றது. அது கேட்ட காளிதேவி அவர்களுக்கேற்பட்ட குறியையும், கலிங்கத்தில் முதுபேய் சுண்ட தீநிமித்தங்களையும், கணிதப்பேய் கனவிலும் நனவிலும் கண்ட குறிகளையும் இணைத்து மிக்க விரைவில் கலிங்க நாட்டில் ஒரு பெரும் போர் நிகழும் என்றும், அதனுல் பேய்களின் பசி முற்றிலும் ஒழியும் என்றும் கூறி உற்சாகப்படுத்தி ஆறுதல் மொழி பகர்கின்ருள். அது கேட்ட பேய்கள் குதித்துக் கூத்தாடி, " ஆடியிரைத் தெழுகணங்கள் அணங்கேஇக் கலிங்கக்கூழ் கூடியிரைத் துண்டுழியெம் கூடாரப் போதுமோ ? ' .' (இரைத்து-இரைந்து; கணம்-பேய் கூட்டம்; அணங்கு-காளி தேவி, கூழ்-உணவு; கூடு-வயிறு: ஆர்தல்-நிறைதல்) என்று காளியை வினவுகின்றன. அதற்குத் தேவி,

  • ஒதஞ்சூழ் இலங்கைப்போர்க்(கு)

ஒட்டிரட்டி கலிங்கப்போர் ”.* (ஒதம்-கடல்; ஒட்டிரட்டி-ஒன்றுக்கு இருமடங்கு) என்று உற்சாக மூட்டும் மறுமொழி கூறிப் பேய்களை அமைதி யுற்றிருக்குமாறு கூறுகின்றதுடன் இப்பகுதி முடிகின்றது. பத்தாவது பகுதி அவதாரம்’ என்பதாகும். இதில் அபயனது பிறப்பு, வளர்ப்பு, இளவரசுப் பட்டம் எய்தியது, முடிசூடியது முதலிய செய்திகள் அழகுற விரித்தோதப் பெறு கின்றன. இவற்றைக் கவிஞர் காளியின் வாய்மொழியாகக் கூறு 27. தாழிசை.230. 28. தாழிசை-231,