பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窓念 பரணிப் பொழிவுகள் கின் ரூர். மேலும், இப்பகுதியில் குலோத்துங்கன் அரசோச் சினமை, அவன் அமைதிக் காலத்தில் பொழுது போக்கினமை போன்ற செய்திகளும், பாலாற்றங் கரைக்குப் பரிவேட்டையாடச் சென்து வேட்டை முடித்ததும் காஞ்சி நகர் அடையும் வரை கன்ன செய்திகளும் இடம் பெறுகின்றன. இச்செய்திகளைக் காளி பேய்கட்குக் கூறிக் கொண்டிருக்கையில் ஒரு பேய் ஓடிவந்து கலிங்க நாட்டில் போர் மூண்ட செய்தியைக் கூறுகின்றது. அதன்னக் கேட்ட பேய்கள் மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடி இசைகின்றன. அவ்வளவில் காளிபேய்களின் ஆடல் பாடல்களைக் நிறுத்துகாது பணித்து, போர்ச் செய்தியைக் கூறிய கலிங்கப் பேயை நோக்கி கலிங்கத்தில் நடைபெறும் போரின் இயல்பைக் கூறுமாறு வினவுகின்றன். இ..துடன் இப்பகுதி முடிவுறுகின்றது. 'காளிக்குக் கூனி கூறியது' என்று குறிப்பிடப் பெறுவது பதிகுேராவது பகுதியாகும். இதில் கலிங்கப் பேய் முதலாவ தாகப் போர்க் காரணத்தைப் புகல்கின்றது. குலோத்துங்கன் காஞ்சியில் தென் மேற்குத் திசையில் அமைந்த மாளிகை பொன்றில், செய்தமைத்த சித்திர மண்டபத்தில், முத்துப் பத்தலின் கீழ்த் தேவியர், அமைச்சர், தானேத் தலைவர் முதலி யோசி புடைசூழ வீற்றிருக்கும் பொழுது சிற்றரசர் பலர் வந்து அவனைத் திறையுடன் காண்கின்றனர். கலிங்க நாட்டரசன் அனந்தபன்மன் மட்டிலும் அங்ங்னம் வந்து காணவில்லை. அதைக் கண்ட குலோத்துங்கன் தன் தானத் தலைவனை கருணு கரத் தொண்டைமான் எள்பவனைத் தண்டெடுத்துச் சென்று கலிங்க வேந்தனின் செருக்கை அடக்கிவருமாறு ஏவுகின்றனன். சோழர் படைகள் கலிங்க நாட்டை அடைந்து எரிகொளுவியும், சூறையாடியும் ஊர்களே அழிக்கும் செய்தி அனந்தபன்மனுக்கு எட்டுகின்றது. உடனே அவன் வெந்தறுகண் வெகுளியில்ை வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி, " வண்டினுக்கும் திசையான மதங்கொடுக்கும் மலர்க்கவிகை அபயற் கன்றித் தண்டினுக்கும் எளியனே எனவெகுண்டு தடம்புயங்கள் குலுங்க நக்கே’’’ (கவிகை.வெண்கொற்றக் கொடை; தண்டு-சேனே; நக்குசிரித்து) ; நககு 29. தாழிசை 376