பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 28 " கானரணும் மலேயரனும் கடலரணும் சூழ்கிடந்த கலிங்கர் பூமி தானரணம் உடைத்தென்று கருதாது வருவதுமத் தண்டுபோலும்’ ’’ எனக் கூறிப் போர் தொடங்குகின்ருன், நால்வகைப் படைகளும் ஆர்த்து எழுகின்றன. இவ்வளவில் இப்பகுதி முடிவடைகின்றது. அடுத்து வரும் போர் பாடியது” என்ற பன்னிரண்டாவது பகுதியில் அதே கலிங்கப் பேய் போரைக் கூறும் செய்திகள் அழகுற விரித்தோதப்பெறுகின்றன. எங்கும் போர் முழக்கம் மண்டுகின் றது. நால்வகைப் படைகளும் தத்தம் எதிர் நின்று பொருகின்றன. செரு முதிர்கின்றது. இரண்டு படைகளும் தாம்தாம் பரந்து பட்டு நின்று பொருத நிலை மாறி, ஒரு முகப்பட்டு நின்று பொரத் தொடங்குகின்றன. பிணமலை பெருகி வருகின்றது. கலிங்க வேந்தன் எதிர் நிற்கலாற்ருது எங்கோ மறைந்து பதுங்கி விடு கின்ருன்.கலிங்க வீரர்கள் தங்கள் உருக் கரந்து நாற்புற மும் சிதறி யோடுகின்றனர். இங்ங்ணம் கருணுகரன் கலிங்கத்தை அழித்து பல்வேறு நிதிகளைக் கவர்ந்து வாகை மாலே சூடிக் குலோத்துங் கனின் அடிபணிந்து நிற்கின்றன். இந்த அளவில் இப்பகுதி நிறைவு பெறுகின்றது. . இறுதியாக களம்பாடியது” என்ற பகுதி அமைகின்றது. போர் நிகழ்ந்த வரலாற்றைச் செவ்வனே சொல்லி முடித்த கலிங்கப் பேய் 'காலக்களம் அது கண்டருள் இறைவி கடிதென’ என அன்னையை அடிபணிந்து வேண்டிநிற்க, காளிதேவியும் பேய்க்கணங்கள் சூழக் களத்திற்கு ஏகிப் போர்க்களக் காட்சி களே ஒவ்வொன்ருகப் பேய்கட்குக் காட்டுகின்ருள். காட்சிகளைக் கண்டு களித்தபிறகு தேவி நீராடிக் கூழ் அட்டு உண்ணுமாறு அலகைகட்குப் பணிக்கின்ருள். கூழ் அடுங் காட்சிகள், அட்ட கூழைப் பேய்கட்குப் பகிர்ந்து வார்க்கும் காட்சிகள் இவற்றைக் கூறும் தாழிசைகள் பன்முறை படித்து அநுபவிக்கத்தக்கன. உண்ட களிப்பால் பேய்கள் குதித்துக் கூத்தாடி வள் ஆளப்பாட்டுக் களால் குலோத்துங்கன் புகழ்பாடி வாழ்த்துகின்றன.

  • யாவ ரும்களி சிறக்கவே தருமம்

எங்கும் என்றும்உள தாகவே தேவர் இன்னருள் தழைக்கவே முனிவர் செய்த வப்பயன் விளக்கவே”, (களி-மகிழ்ச்சி; அருள்.மக்கள் மாட்டு வைக்கும் அருள்) 30. தாழிசை 377 31. தாழிசை, 595