பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£4 பரணிப் பொழிவுகள் " வேத நன்னெறி பரக்கவே அபயன் வென்ற வெங்கலி கரக்கவே பூத லம்புகழ் பரக்கவே புவி நிலக்க வேபுயல் சுரக்கவே”, ’’ (பரக்க-எங்கும் பரவுக; கலி.துன்பம்; கரக்க-மறைக; புகழ்புகழ்ச் செயல்கள்; நிலக்க-திலே பெறுக: புயல்-மழை) என்ற வாழ்த்துடன் இப்பகுதி முற்றுப்பெற்று நூலும் நிறைவு அடைகின்றது. . முடிவுரை : ஒரு சில கூறி பேச்சை முடிக்கின்றேன். அன்பர்கனே, கலிங்கத்துப்பரணி தாழிசையால் முதன் முதலாகத் தோன்றிய ஓர் ஒப்பற்ற பரணி நூலாகும். இந்நூல் பரணி நூல்கட் கெல்லாம் தலைசிறந்ததாய்த் திகழ்கின்றது; பரணி பாடுவோர்க் கெல்லாம் முன்மாதிரியாய் விளங்குகின்றது; தமிழ் இலக்கிய வானில் ஒரு கலங்கரை விளக்கம்போல் நின்று நிலவுகின்றது. காவியங்களுக்கெல்லசம் சிறந்ததாய்க் கம்பராமாயணம் திகழ்வது போல, பரணி நூல்களெல்லாவற்றிலும் சிறந்ததாய்க் கலிங்கத்துப் பரணி ஒளிர் கின்றது. கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக் அடித்தரும் தாம் பாடிய தக்கயாகப் பரணியில் "தென் தமிழ் தெய்வப் பரணி" என்று இந்நூலைச் சிறப்பித்துள்ளமை ஈண்டு எண்ணி மகிழத் தக்கது. நூலைப்பாடியருளிய கவிஞர் கோமானே பும் பிற்காலத்துப் புலவர் பலபட்டடைச் சொக்கநாதர் என்பார் கபரணிக்கோர், சயங்கொண்டான்' என்று பாராட்டிப் போற்றியுள்ளார். எனவே, அணி நலன்களும் சுவைப் பயன் களும். வரலாற்றுக் குறிப்புக்களும், பிறநூல்களில் காண்டற்கரிய கற்பனே தயங்களும், சந்தமேம்பாடும் செறிந்துள்ள இந்த ஒப்பசிய பனுவலேத் தமிழ்மக்கள் பன்முறை படித்துச் சுவைக்க வேண்டிது அவர்கள் கடமை என்று கூறி அமைகின்றேன். வணக்கம், 32. தாழிசை, 596 33. தக்கயாகப் பரணி-தாழிசை 776, 34. தனிப் பாடல்,