பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கடை திறப்பு இரண்டாம் பொழிவு தமிழன்பர்களே ! தாய்மார்களே ! வணக்கம். இன்று கலிங்கத்துப் பரணிபற்றிய இரண்டாம் சொற்பொழிவு நிகழ இருக்கின்றது. சென்ற சொற்பொழிவில் நூலை ஒருவாறு அறிமுகம் செய்து வைத்தேன். சொற்சுவை, பொருட் சுவை, ஒசை நயம் இவை நிறைந்தது இந்நூல் என்பதை அறிந்தோம். இதனுல்தான் இது கற்ருேராலும் மற்ருேராலும் மிகவும் பாராட்டப்பெறுகின்றது என்பதனையும் தெரிந்து கொண்டோம்.

  • முன்னேர் மொழிப்பொருளே

யன்றி அவர்மொழியும் பொன்னே போற் போற்றுவம் ”.1 என்னும் தமிழ் இலக்கிய மரபினேயொட்டிப் பாடும் இயல்பினை யுடையவர் நம் கவிஞர் பெருமான். இவருடைய பாடல்களில் இவர் காலத்திற்கு முற்பட்ட புலவர்களுடைய கருத்துக்கள் மிளிர் வதை ஆங்காங்குக் காணலாம். இச்சொற்பொழிவிலும், இனி நிகழவிருக்கும் சொற்பொழிவுகளிலும் இத்தகைய இடங்களைக் காட்டிப் போக நினைத்துள்ளேன். இன்றைய சொற்பொழிவில் 'கடைதிறப்பு’’ என்ற தலைப்பில் சில கருத்துக்களை உங்கள் முன் வைக்கின்றேன். கதவைத் திறக்கு மாறு வேண்டுதலையுணர்த்தும் செய்யட்களின் பகுதி என்பது இதன் பொருளாகும். "கடை திறப்பு' என்பது பரணிப் பனு வலின் உறுப்புக்களுள் ஒன்று என்பதைச் சென்ற சொற் பொழிவில் குறிப்பிட்டதை ஈண்டு மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன். "கலிங்கத்துப் பரணி" என்னும் வனப்பு மிக்க !. நன்னூல் நூற்பா, 9,