பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு $27 வரும் பாடல்களில் யாதொரு குறிப்பும் காணப்பெறவில்லை; இப் பகுதி அம்மகளிரைப் பற்றியதே என்று கொள்வதற்கும் யாதொரு சான்றும் தென்படவில்லை. ஆணுல், அதற்கு மாருகக் கொழுநருட னிருந்து அவரோடு ஊடியும் கூடியும் மகிழ்கின்ற நிலையில் அம் மகளிரைக் கடை திறக்கும்படி வேண்டும் பாடல்களே மிகுதியாகக் காணப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக,

  • மெய்யே கொழுநர் பிழைதலிய

வேட்கை நலிய விடியளவும் பொய்யே யுறங்கும் மடநல்லிர் ! புனைபொற் கபாடம் திறமினுே '." (கொழுநர்-கணவர்; நலிய-மனத்தை வாட்ட; வேட்கை ஈண்டு, கல்வி வேட்கை.) என்ற பாடல நோக்குங்கள். கணவருடைய உண்மையான தவற்றினை எடுத்துக்காட்டி அவருடன் புணர்ச்சிக்கு இடத்தராமல் ஊடுகின்றனர் மகளிர் சிலர்; இதனுல் கணவன்மார் தாம் செய்த பிழையை எண்ணி மனவாட்டம் அடைகின்றனர். ஆணுல், உண்மையாக அவருடன் புணர விரும்புகின்றனர்; புணர்ச்சி வேட்கை அவர்களிடம் மீதுளர்ந்து நிற்கின்றது. என் செய்வர் ? இதனுல் உறக்கமும் அவர்கட்கு வந்திலது. ஊடினராயினும் கலவி வேட்கையால் உறங்காராய்த் திண்டாடுகின்றனர். 'பொய்யே உறங்கும் மடநல்லீர்!’ என்று, உறங்குவது போல் பாசாங்கு செய்யும் மகளிர் என்று அவர்கள் விளிக்கப் பெறு வதைக் காண்மின். இரண்டாவதாக வீரர்தம் இல்லக்கிழத்தியரே இப்பகுதியில் கூறப்பெற்றவராகக் கொண்டாலும் சில அசம்பாவிதங்களே உண்மையில் நிகழ்ந்தனவாகக் கொள்ளல் நேரிடும். எடுத்துக் காட்டாக, நனவினிற் சயதரன் புணரவே பெறினும் நனவெனத் தெளிவு(ரு)து அதனையும் பழைய அக் கனவெனக் கூறுவீர் தோழிமார் நகைமுகம் கண்டபின் தேறுவீர் கடைதிறந் திடுமினுே. * (நனவு-விழித்திருக்கும் நேரம், சயதரன் -குலோத்துங்கன்; தெளிவுருது-தெளிவு அடையாமல்; அதனையும்-புணர்ச்சியையும்; நகை-நனவினைக் கனவெனக் கூறியதைக் கேட்டு எள்ளி ஆடிய நகை; தேறுவீர்-தெளிவீர்) 3. தாழிசை-35,