பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 39 இலக்கியத்தில் அவ்வாறு கொள்ளல் மரபாக இருப்பினும், வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இலக்கி யத்தில் அவ்வாறு கொள்ளல் சிறிதும் பொருத்தம் அன்று. அதிலும் கவிஞர் கோமான் சயங்கொண்டார் அத்தகைய ஒரு சூழ்நிலையை உண்டாக்க ஒருப்படார் ; அங்ங்ணம் ஒருப்பட்டார் என்று கருதுவது பெரியதோர் அபவாதமுமாகும். நான்காவதாக : தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணி களுள் வரும் கடை திறப்புக்களில் வாணர மகளிர், நீரரமகளிர், மேரு கயிலை போன்ற இடங்களில் வாழும் மகளிர் முதலியோர் கடை திறக்குமாறு விளிக்கப்பெறுகின்றனர். கவிஞரே அவ் வாறே விளிப்பதாகக் கொன் வரின் ஒட்டக்கூத்தரும், இரணிய வதைப் பரணியாசிரியரும் வானம், மேரு, கயிலே முதலான இடங்கட்குச் சென்று அவ்வவ்விடங்களில் உறக்கத்தினுல் பகலில் கதவடைத்திருக்கும் மகளிரைக் கதவு தட்டுபவராகக் கூறுதல் வேண்டும். இ..து எவ்வாற்ருனும் பொருந்தாது என்பது எண்ணிப் பார்ப்பார் அனைவருக்கும் எளிதில் புலணுகும். முன்னர்க் குறிப்பிட்ட இரண்டு கருத்துக்களிலும், இரண்டா வது கருத்தே மிகவும் பொருத்தமுடையது ; கொள்ளக் கூடியது. தம் அரசனும் அவனுடைய தானே த்தலைவனும் அடைந்த கலிங்க வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டித் தலைந்கரத்திலுள்ள பல்வேறு மகளிரும், நாட் காலேயே எழுந்து தம் தோழியரின் வாயிற்கட்ை முன்னின்று அவர்களேத் துயிலெழுப்புவதாகக் கொள்வதுதான் மிகவும் பொருத்தமுடைய தாகும். இத்தகைய பண்டைய மரபு திருப் பாவை, திருவெம்பாவை முதலிய நூல்களில் பயின்று வந்துள்ள மரபுகளே அடியொற்றி வந்துள்ளதாகக் கொள்ளல் வேண்டும். கோகுலத்திலுள்ள ஆய்ச்சியர் மார்கழி நோன்பில் மாயன் பேர் பாடி மகிழ்வதற்குத் தம் தோழியரின் முன்றிலில் சென்று அழைப்பதை,

  • நாயகப் பெண்பிள்ளாய்

நாரா யணன்மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ ? 9 לל தேசம் உடையாய் திற”. என்றும், 9. திருப்பாவை 7