பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 47

  • வாயின் சிவப்பை விழிவாங்கத்

மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத் தோயக் கலவி அமுதளிப்பீர் துங்கக் கபாடம் திறமினுே.”* (வாங்க-பற்றிக்கொள்ள, தோயம்-கடல்; துங்கம்-மேன்மை) என்ற பாடலில் விழிசிவக்க இதழ் வெளுக்கக் கலவி புரிந்தமை தெளிவாகக் காட்டப்பெறுகின்றது. பட்டப் பகலென திலவு பொழியும் இரவில் மேன்மாடத்தில் மங்கையொருத்தி கலவி இன்பத்தில் திளேத்த பிறகு உறங்கி விடுகிருள். அவள் அணிந்திருந்த ஆடை நெகிழ்ந்து போய் விடு கின்றது. அரைத் தூக்கத்தில் நிலவொளியை ஆடையென தினத்துக் கொண்டு அதனைப்பற்றி இழுத்து உடுத்திக் கொள்ள முனைகின்ருள் அந்நங்கை. இதனேக் கவிஞர், ' கலவிக் களியின் மயக்கத்தால் கலேபோய் அகலக் கலைமதியின் நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர் நீள்பொற் கபாடம் திறமினே.”* (கலவி-புணர்ச்சி, களி-பெருமகிழ்ச்சி, கலே-ஆடை, மதி. நிலா, நிலவு-நிலாவொளி; துகில்-ஆடை} என்று காட்டுகின்ருர். மகளிரில் சிலர் புணர்ச்சியின் பத்தால் மயங்கிப் பொழுது புலர்ந்ததையும் அறியாமல் தம் கொழுநரின் மார்பிஜனயே படுக்கையாகக்கொண்டு உறங்கும் காட்சியும் காட்டப்பெறுகின்றது." கலவிப் போரில் ஒருத்தியின் கொங்கையில் எப்படியோ நகக் குறி ஏற்பட்டு விடுகின்றது. அந்தக் குறியை அடிக்கடி நோக்கும் பொழுதெல்லாம் கலவியில் தான் பெற்ற இன்பத்தை அடை கின்ருள் அப் பெண்மணி. நித்திய தரித்திரன் ஒருவனுக்கு எதிர் பாராதவண்ணம் நிறைந்த பொற்குவியல் கிடைப்பின் அவன் அச் சத்தின் மிகுதியால் அப்பொருட்குவியலேப் பிறர் அறியாவண்ணம் பார்த்துப் பார்த்துப் பெருமகிழ்ச்சியுறுதல் போல, தன் கொங் கையில் புதியனவாய்த் தோன்றியுள்ள தம்கொழுநரின் நகத்தால் 48. தாழிசை-61, 49. தாழிசை-34. 50. தாழிசை-37.