பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பரணிப் பொழிவுகள் ஏற்பட்ட குறிகளே தானம் மிகுதியால் நனியிடத்திற்குச் சென்று அவற்றைப் பார்த்துப் பார்த்து மகிழ்கின்ருள் அந்நங்கை. * முலேமீது கொழுநர்கைந் நகமேவு குறியை முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள் போல் கலே தீவி யாரேனும் இல்லாவி டத்தே கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின்.' |கொழுநர் - கணவர் ; கலை - மேலாடை , நீவி விலக்கி ) என்று இக்காட்சியைக் காட்டுவர் கவிஞர்பெருமான். இன்ளுெரு காட்சி. இரவில் மங்கையரும் அவர்களுடைய கணவன்யாகும் கல்விப்போர் நிகழ்த்துங்கால் காமம் மீது மனங் கணித்து முறைபிறழ்ந்து தகுதியற்ற காதற்சொற்களைப் பேசிக் கொண்டிருத்தனர், அவற்றைச் செவிமடுத்த கிளிகள் சொன்ன தைச் சொல்லுமாம் கிளி என்ற தம் குணத்திற்கேற்பப் பகலில் அவற்தைச் சொல்லத் தொடங்கின. அவற்றைக் கேட்ட அப் பேதையர் பெரிதும் தாணி, அக்கிளிகளே மேலும் பேசவிடாமல் அவைகளின் வாயைப் புதைத்தனர்.

  • நேயக் கலவி மயக்கத்தே

நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப வாயைப் புதைக்கும் மடநல்வீர் மணிப்பொற் கபாடந் திறமினே.”* (தேடல் - அன்பு ; கலவி - புணர்ச்சி ; மொழி - சொல்) என்பது கவிஞர் காட்டும் சொல்லோவியம். பிற்காலத்தில் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதியவர்களும் சதாவ தானம் சரவணப் பெருமாள் கவிராயரும் வினவிடையாக அமைத்துப் பாடிய, -

  • தத்தை யொருத்திகைத் தத்தையையோ யாதடித்த

வித்தையென்ன தென்முகவை வேல்வேந்தே மெத்தையின்மேல் புல்லின என் மன்னன் புகன்மொழிகற் றுச்சகியால் சொல்லினயே என்று துடித்து.”* (முகவை சேதுபதிகளின் நாடு ; சகி.தோழி) 51. தாழிசை-47. 52. தாழிசை-67. 53. இப்பாடல் தனிச்செய்யுள் சிந்தாமணி' யில் உள்ளது,