பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 49 என்ற வெண்பாவில் மேற்கூறிய பாடலின் பொருள் அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்க. இத்தகைய பல பாடல்கள் கடை திறப்புப் பகுதியில் உள்ளன. அவற்றை நீங்களே படித்துச் சுவைக்குமாறு வேண்டுகின்றேன். நான்காவதாக : மகளிரின் ஊடல் இயல்புபற்றிய பல காட்சிகள் இப்பகுதியில் வருகின்றன. இவற்றுள் சுவை மிக்க காட்சி யொன்றினேக் கரண் போம்.

  • விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி வெகுளி மென்குதலை துகிலினேப் பிடிமின் என்றபொருள் விளேய நின்றருள்செய் பெடைந லீர்கடைகள் திறமிளுே.”*

(துகில் - ஆடை , முனிவெகுளி . ஊடலால் வந்த சினம் ; குதலை . பொருள் தோன்குச் சொல் : விக்ாய உண்டாக : நின்று - அகலாமல் நின்று பெடை - பெண் அன்னம் ; நவீர் ; நல்ல குணமுடையவர்களே ! என்பது ஒரு சொல்லோவியம். இஃது ஒரு பள்ளியறைக் காட்சி யாகும். ஆடவர் ஊடல்கொண்ட தம் காதல் மடவார் துகிலிகனக் காமவேட்கையால் பற்றி ஈர்க்கின்றனர்.அச்செயல் அம்மகளிர்க்கு ஒரு புறம் இன்பமும் மற்ருெகு புறம் தானமும் விளேவிக்கின்றது. ஆகவே அவர்கள், எங்கள் துகில் பிடிமின் என்ற பொருள் தோன்ற அவற்றை விடுமின் எங்கள் துகில் விடு மின் என்று கூறித் தாமும் விடாது பற்றி ஈர்ப்பதுபோல் பாசாங்கு செய்கின் றனர். இதுவே காட்சி. கணவர்மாட்டு அன்பும் காமத்தால் நலிவும் எய்திய மகளிர்பால் தோன்றிய மொழியாதலின் மென்கு தலை என்று கூறினர் கவிஞர். இன்ைெரு பாடலில் ஊடலின் இயல்பு கூறப்பெறுகின்றது. மகளிர் ஊடுங்கால் கொங்கைகளின் இளந் தன்மை அழியும்; அதாவது, பசலை நிறம் அடையும். செவ்வரி படர்ந்த கண்களினின்று நீர் பெருகி நிற்கும். இளமகளிர் தம் கணவரைத் தணந்தால் கொங்கை, முகம் முதலிய உறுப்புக்கள் பச8ல பாய்தலும், அவர்களைப் புணர்ந்தால் அப்பசலை நீங்கலும் இயல்பு என்பது முன்னேர் இலக்கியங்களில் கண்டதாகும். எடுத்துக்காட்டுக்களாக சங்க இலக்கியங்களில், 53. தாழிசை-25. 54. தாழிசை-52. 4