பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 莎影 " ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். ' (ஊடல்.சிறு பிணக்கு உணர்தல்.பிணக்கினேப் போக்கத் தலைவன் மேற்கொள்ளும் முயற்சியால் தலைவி தெளிதல்; புணர்தல். கூடல்) என்ற வள்ளுவப் பெருமானின் கருத்தினே யொட்டி வந்துள்ள தாகக் கொள்ளலாம். அடுத்து, ஊடலும் கூடலும் விழைந்த மகளிரின் இயல்பு இரண்டு பாடல்களில் காட்ட ப்பெறுகின்றது. "மெய்யே கொழுநர்’ (தா. 36) எனத் தொடங்கும் பாடலே முன்னரே காட்டி விளக்கினேன். மற்ருெரு பாடல், " தழுவும் கொழுநர் பிழைநலியத் தழுவேல் என்னத் தழுவியகை வழுவ உடனே மயங்கிடுவீர் மணிப்பொற் கபாடம் திறமினே." (கொழுநர்-கணவர்: நலிய-வகுத்த என்ன...என்ன என்று கணவரை தோக்கிக் கூற, கை-கணவர் கை, வழுவ-தழுவ} என்பதாகும். களவுப் புணர்ச்சியின்போது நின்ஜனப் பிரியேன், பிரியினும் தரியேன்” என்று கூறிய வாக்கு பொய்த்துப் போர் மேற்சென்ற தம் கணவர் குறித்த பருவத்து வாராததனுல், அவர்கள் வந்தவுடன் அவர்கள் மீது ஊடல் கொள்கின்றனர் மகளிர் சிலர். கணவர் தழுவ வருங்கால் தழுவேல்” என்று பிணங்குகின்றனர். அவர்கள் கணவரும் அணைத்த கைகளே நழுவ விடுகின்றனர். இதனுல், அம்மகளிர் புணர்ச்சி விருப்பால் மயங்கி மனம் வருந்துகின்றனர். இப்படிப் பல ஊடற் காட்சிகள். ஆருவதாக மகளிரின் பிற இயல்புக% க் காட்டும் ஒரு சில காட்சிகளைக் காட்டுவேன். துயில் நீங்கி எழுந்தாள் ஒரு மங்கை, துயிற்பொழுதில் கூந்தல் அவிழ்ந்து கிடந்தது. ஆடை நெகிழ்ந்து நின்றது. துயில் நீங்கி எழுந்தவள் ஒரு கையால் அவிழ்த்து நின்ற கூந்தலைத் தாங்கினுள். மற்ருெரு கையால் நெகிழ்ந்து நின்ற ஆடையைப் பற்றினுள். அந்நிலையில் இரண்டோரடி எடுத்து வைக்கின் ருள். 59. குறள்-1106. 60. தாழிசைய44.