பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

然篮 பரணிப் பொழிவுகள் துயில் நீங்கி எழுத்தபோதும் அவள் முகம் மலர்ச்சியுற்று விளங்கு கின்றது. இக்கட்சியை, " சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலேய ஒருகை கீழ் அகிலசெய் துகிலொடே திருஅ னந்தலினும் முகம லர்ந்துவரு தெரிவை மீச்கடைகள் திறமினுே. ' 1கொத்து.பூங்கொத்து அளகம்-கூந்தல்; அகிலசெய்-அலே போல் மடித்து மடித்து தோன்றும்; துகில்-உடை, அனத்தல். துங்கியெழுத்த மயக்க திகில; தெரிவை-பெண்) என்று காட்டுவர் கவிஞர். பொருள்களின் இயல்பை உள்ளவாறு எடுத்துக் காட்டும் திறம் மிக அழகியது. எடுத்துக்காட்டாக மகளிரின் நடை அழகினே தயம்பட எடுத்துரைக்கின் ருர் கவிஞர் பெருமான். துயிலெழுத்த மங்கையரின் சுருண்ட கூந்தல் மிகுதியாய் அசை கின்றது; அவர்கள் பாதங்களில் அணிந்துள்ள கிண்கிணிகள் இன்ளுேசையை எழுப்புகின்றன. அவர்கள் துயில் எழுந்த திலையில் மயில்களின் கூட்டம்போல் காணப்படுகின்றனர். " சுரிகுழல் அசைவுற அசைவுறத் துயிலெழும் மயிலென மயிலெனப் பரிபுர ஒலிஎழ ஒலிஎழப் பனிமொழி யவர்கடை திறமிகுே." 2 | சுரிதல்.நெளிதல், குழல்-கூந்தல்; துயில்-உறக்கம்; பரிபுரம். கிண்கிணி) என்பது கவிஞரின் சொல்லோவியம், மகளிர் கணவரோடு உறையும் நிலை மிக அழகாகக் காட்டப் பெறுகின்றது. விலைமதிக்க முடியாத தரளமாலைகள் அவர்கள் கொங்கைகளில் அசைந்த வண்ணம் உள்ளன; அவர்களின் கெண்டைமீன் போன்ற கண்விழிகள் புரண்டு புரண்டு காதணி களில் தாக்குகின்றன. இந்நிலையில் மலேபோன்ற தம் கணவரின் தோள்களைத் தழுவி நிற்கின்றனர். இந்நிலை மயில்கள் ஆடி வருவன போல் தோன்றுகின்றது. 61. தாழிசை46. 62. தாழிசை.23.