பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 53 “ விலையி லாதவட முலையி லாடவிழி குழையி லாடவிழை கணவர்தோள் மலையி லாடிவரு மயில்கள் போலவரு மடந லீர்கடைகள் திறமினே.” “ (வடம்-முத்து மாலை; விழி-கண், குழை-காதணி; விழைவிரும்பும்) என்று கவிஞர் காட்டும் சொல்லோவியத்தை மனத் திரையில் அமைத்து மகிழத் தக்கது. இங்ங்னம் வரும் காட்சிகள் பலப் பல. அவை யாவும் படிப்போர்க்கு இன்பம் பயப்பவை. புறத்தில் அகம் : இனி, புறப்பொருளாகிய போர், வெற்றி முதலியவற்றைப் பாட வந்த கவிஞர் அகப்பொருள் துறைகளை அமைத்துப் பாடியதன் கருத்து யாது என்பதுபற்றி ஒரு சில கூறி அமைவேன். நூலில் கடை திறப்பை அடுத்து வரும் பகுதிகளுள் இராச பாரம்பரியம்’, ‘அவதாரம்’ என்ற இரண்டினத்தவிர ஏனைய பகுதிகள் யாவும் குரூரமான, அச்சத்தை விளைவிக்கும் கூறு களேயே வருணித்துச் செல்லுகின்றன. பேயும் பிடாரியும், பிணமும் நினமும், இடுகாடும் சுடுகாடும், அறுபட்ட தலையும் மிதிபட்ட உடலும், செங்குருதி வெள்ளமும் சின மறவர் வீரமும், போர்க் களத்தில் காணும் பல்வேறு பயங்கரமான நிகழச்சி களும் காட்சிகளும், கேட்போரிடம் அச்சத்தை விளைவிக்கும் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் காட்சிகளும் காணக் கிடக் கின்றன. மாய விளக்கினைக் கொண்ட மந்திரவாதி, அல்லா வுத்தீன் என்ற சிறுவனேக் கூட்டிச் செல்வதைப்போல் கவிஞரும் நம்மை இந்தப் பயங்கர உலகிற்கு அழைத்துச் செல்லுகின்ருர், செல்லும்போதே துவரத் துறத்த ஞானியர் உள்ளத்தையும் ஈர்க்க வல்ல சில இன்பக் காட்சிகளேயும் காட்ட நினேக்கின்ருர்; காட்டி வெற்றியும் பெறுகின்ருர். புறத்துறைகளைப் பொருத்திப் பாடும் நூலில் அகத்துறை களேயும் அமைத்துப் பாடினல், வீரச்சுவையும் உவகைச் சுவையும் கழைந்து நின்று, நூலேக் கற்போர்க்குக் கழிபேரின்பம் பயக்கும் என்று கருதியே கவிஞர் அகத்துறை கட்கு இடம் தந்திருக்க வேண்டும், அன்றியும், நிமிர்ந்த செல்வமும் நிறைந்த இளமையும் உள்ள கட்டிளங் காளேயர் தம் காதலியரைத் துறந்து போர்க் காதலில் ஈடுபட்டனர் என்ருல் அவர்களது வீரம் சொல்லுந்தர 63. தாழிசை.42.