பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎、 பரணிப் பொழிவுகள் மின்து. இது நாட்டுப் பங்குக் தூண்டப் பெற்ற தியாகம்; நாடா ரூம் மன்னன் கல்லாட்சியை நிலைபெறச் செய்ய நாட்டு மக்கள் ஒத்துழைப்பு நல்கும் ஒர் அற்புதப் பண்பு. இந்த நிலையைக் காட்டிய பிறகு அவர்களின் வீரத்தையும் காட்டினுல் அவர் களுடைய மனப்பான்மையும் உடற்பாங்கும் எளிதில் புலஞகும் என்று கருதியே களப்போர் பாடும் நூலில் கலவிப்போர்க் குறிப்புக்கன்யும் பெய்து கலந்து வைத்தார் என்று கருதுவதில் தவது ஒன்றும் இல்லை. அகத்தையும் புறத்தையும் குழைத்த செயல்பற்றி இன்னொரு விதமாகவும் கருதலாம். எல்லாச் சுவைகளிலும் சிறந்தது காதற் சுவை; சிருங்கார ஏலம். இச் சுவை எல்லா உயிர்களிடமும் வழி வழி வந்துகொண்டிருக்கும் வாசனையாய் அமைந்து கிடக் கின்றது. இத்தத் தூண்டலின் காரணமாக இனப்பெருக்கம் தொடர்த்து நடைபெற்று வருகின்றது. ஆண்டவன் படைப்பில் இ.து அற்புதமாக அமைத்து கிடக்கின்றது; படைப்பின் பெரு விசையாகவும் இயங்கி வருகின்றது. இதனே எண்ணியே தொல்காப்பியரும்,

  • எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான்அமர்ந்து வருஉம் மேவற் ருகும். ' .' என்று கூறியுள்ளமை கண்டு கருதத் தக்கது. எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடும் விருப்ப முடையவையாகும் என்பது இதன் கருது. தவிர, தாவர உலகிலுள்ள ஒரு செய்தியைத் தெளிவாக அறிந்தால் இதை நன்கு உணர்ந்து தெளிவு பெறலாம். தாவரங்களில் சிலவற்றின் இனப்பெருக்கத்திற்குத் துணை புரிபவை வண்டுகளாகும். அவ் வண்டுகளைத் தம்பால் ஈர்ப்பதற்கு அவற் தின் மலர்கள் பல்வேறு வண்ணக் கோலங்களுடனும், மணங்களு டனும் அமைந்துள்ளன: அன்றியும், அம்மலர்கள் அவ்வண்டு களின் உணவாகிய தேனையும் மணப்பொடிகளையும் (மகரந்தம்) கொண்டுள்ளன. இந்த மணப்பொடிகளே இனப் பெருக்கத்திற் குரிய ஆண் உயிரணுக்களாகும். வண்டுகள் மலர்கள்தோறும் உலவும்போது இவ்வணுக்கள் மலர்களிலுள்ள பெண் உயிரணுக் களுடன் கலக்க வாய்ப்பு உண்டாகின்றது. இங்ங்னம் தாவர இனத்தின் உயிர் நாடியாகவுள்ள மணப்பொடிகளே வண்டுகளின் உணவாக அமைந்திருப்பது படைப்பின் விந்தை என்று கருத வேண்டும். படைப்பின் இந்த ‘மறை பொருளே’ (இரகசியத்தை) 64. தொல். பொருள். நூற்பா 219 (இளம்).