உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 5む அறிந்த கவிஞர்கள் சிறுமதியினரையும் இன்பச் சுவையால் ஈர்த்து விடலாம் என்று கருதியே தம் நூல்களில் அகப்பொருள் துறைகளேயமைத்துப் பாடுகின்றனர் என்று கருதுவதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த இன்பத்தைக் கருதி நூலினைப் படிப் போர் நூலில் நுவலப்பெறும் பேருண்மைகளையும் பிறவற்றையும் அறிந்து பெரும் பயன் எய்துகின்றனர். இந்த அடிப்படை யிலேயே சீவான்மா.பரமான்மாவின் உறவினை விளக்கும் தெய்வப் பனுவலாம் திருக்கோவையாரை" மணிவாசகப் பெரு மான் அருளிச்செய்தார்; அதே தொடர்பினே அருமையாகக் காட்டும் "திருவிருத்தம்' என்ற அற்புதப் பனுவலே நம்மாழ்வார் அருளினர். ஒரு நூலிற்கு அகப்பொருட் சுவையூட்டுவது வேப்பிலே யுருண்டைக்கு வெல்லம் ஊட்டுவது போலாகும் ; கொயினு மருந்திற்குச் சருக்கரைப் பாகு ஊட்டி உருண்டைகளாகச் செய்யும் முறையினே ஒக்கும். இத்தகைய ஒரு முறையை மேற் கொண்டே சயங்கொண்டாரும் போரைப் பாடும் தம் நூலில் கலவிப் போரையும் காட் டிர்ை என்று கொள்வதே ஏற்புடைத் தாகும் என்று கூறி அமைகின்றேன். வணக்கம்.