பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பேய்கள் உலகம் மூன்ரும் பொழிவு தமிழன்பர்களே ! தாய்மார்களே ! வணக்கம். இன்று நிகழப்போவது கலிங்கத்துப் பரணி பற்றிய மூன்ருவது சொற்பொழிவு. சென்ற பொழிவில் கடை திறப்பினக் கண்டோம். அது அச்சிறு காவியத்தின் முன் வரயில்போல் அமைந்துள்ளது என்று கூறினேன்; எழிலெல்லாம் திரண்ட ஒரு வனப்பு மிக்க இளமரக்காபோல் அது காட்சி அளிப் பதையும் காட்டினேன். இன்று காவிய மாளிகையினுட் புகுந்து கவிஞனின் ஈடும் எடுப்புமற்ற அற்புதப் படைப்பினேக் காணப் போன்ருேம். தமது அழகிய கற்பனைகளால் கவிஞர் பெருமான் படைத்துக் காட்டும் ஒரு புதிய உலகினேயே காணப்போகின்ருேம். நாம் சிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் உலகினேயும் அங்குக் காண்போம். கவிஞன் காட்டும் புதிய உலகம் பேய்கள் உலகம்; அதனேயும் அங்குக் கண்ணுறுவோம். பதின்மூன்று இயல் களேக் கொண்ட அச் சிறுகாப்பியத்தில் கடவுள் வாழ்த்து’ போக நான்கு பகுதிகளில் மக்கள் உலகினைப்பற்றிய செய்திகள் கூறப் பெறுகின்றன. மூன்று பகுதிகளில் பேய்களின் தலைவியாகிய காளி தேவி, அவள் வாழும் சூழ்நிலை, அவளுடைய திருக்கோயிலின் அமைப்பு ஆகிய செய்திகளும் ஏனேய ஐந்து பகுதிகளில் பேய் களின் இயல்புகள், அவைகளின் செயல்கள் முதலியனவும் காட்டப்பெறுகின்றன.இந்த இருவேறு உலகங்களேயும் இ8ணத்துக் காட்டும் கவிஞனின் கற்பனை இலக்கியச் சுவைஞர்களே இன்பத் தின் கொடு முடிக்குக் கொண்டு செலுத்துவதைக் காணலாம். இலக்கியத்தில் கற்பனை : கவிதைகளைக் கனிவித்துக் கற் போரின் மனத்தை அகன்ற பார்வையில் கொண்டுசெலுத்துவது அவனுடைய கற்பனைத் திறன் என்பதை நாம் அறிவோம். கவிதைகளின் பிற பண்புகளுக் கெல்லாம் அடிநிலமாக இருப்பது