பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 37 இக் கற்பனேயே. இன்னும் கூறப்போளுல் அதன் கொடுமுடியாக இருப்பதுவும் இக் கற்பனேயே என்பதனையும் அறிகின்ருேம். உணர்ச்சிகளின் நிலைக்களஞக அமைக்கப்பெறும் எல்லா வகை இலக்கியப் படைப்புக்களும் எழிலுடன் பொலிவுறுவதற்கு இக் கற்பனையாற்றல் மிகமிக இன்றியமையாதது. இக் கற்பனை என் பதுதான் என்ன ? இதனைச் சொற்களால் வரையறை செய்து காட்ட இயலாது. "கற்பனேயின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது: சொற்களால் உணர்த்த முடியாது; அஃது அதன் பலன்களே மட் டிலும் கொண்டே அறியப்பெறுவதொன்ருகும்' என்று இரஸ்கின் என்ற திறனுய்வாளர் கூறியிருப்பது ஈண்டு எண்ணற்குரியது. கவிஞர்கள் உள்ளதை உள்ளவாறு கூறுவதால் மகிழ்ச்சி அடைவதில்லே. உள்ளம் விரும்புமாறு செய்திகளே அமைத்துக் கூறுவதில் அவர்கள் களிப்படைகின்றனர்; நம்மையும் மகிழ்விக் கின்றனர். கவிஞர்களின் உள்ளம் இட்ட இடத்தில் கிடக்கும் கல் போன்றது அன்று. அது கதிரவன் ஒளியையும் காற்றையும் நாடி மேல்நோக்கி வளரும் செடி போன்றது : மேன்மேலும் சுற்றி வளரும் கொடிபோன்றது. ஆகவே, பொருள்களின் இருப்பை உள்ளவாறு கண்டு அந்த எழிலில் அவர்களுடைய உள்ளம் அமைதி அடைவதில்லை ; பொருள்களே மேலும் வனப்புறச்செய்து தம் உள்ளம் விழையும் சிறந்ததோர் உலகினேப் படைக்க முயல் கின்றது. அந்த முயற்சி இடைவிடாத முயற்சியாக வளர்ந் தோங்குகின்றது. அதுவே அவர்களுடைய அகத் தெழுச்சிக்குக் (inspiration) காரணம் ஆகின்றது. உள்ளது போதும் என்ற மனநிறைவு ஏற்பட்டு விட்டால் அம்மனநிலை புதியன படைக்கும் ஆற்றலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் ஆகிவிடும். இதனே உளங் கொண்டே ஆபர்குரோம்பி என்பார் உள்ளது உள்ள வாறு அமையும் கற்பனேயில் கலைஞர்கட்கு ஆர்வம் இல்லே என்றும், உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனையிலேயே அவர் கட்கு ஆர்வம் மிகுதியாக உள்ளது என்றும் கூறியிருப்பதை ஈண்டுக் குறிப்பிட விரும்புகின்றேன். 1. “The essence of imaginative faculty is utterly mysterious and inexplicable and to be recognised in its effects only”— Ruskin. 2. “It is just possible to imagine life exactly as it is; but the exciting thing is to imagine life as it might be; and it is then that imagination becomes an impulse capable of inspiring ಚ್ಟ-೭. Abercrombie (Princri ples of Literary Criticism p. 87.)