பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

氨海 பரணிப் பொழிவுகள் சாயாதேவியின் பிரிவைப் பொருமல் தேடித் திரிவதாகக் கூறும் கற்பனே எண்ணி எண்ணி மகிழ்வதற்குறியது. அக் காட்டில் கதிரவனின் வெம்மைக்கு ஆற்ருது பொரி பொரியாய்ப் போன காரை மரங்களும், கரிந்துபோன சூரைமரங் களும், பிற மரங்களும் செடிகளும் காட்சி யளிக்கின்றன. மரங்கள் தண்ணின்றி வாடுதலால், தங்கள் நிழலைத் தாமே உட்கொள்ளக் கூடுமெனக் கருதி அவற்றின் நிழல் இல்லாது மறைந்து போயிற்ரும், “ ஆத வம்பருகு மென்று நின்றநிழல் அங்கு நின்றகுடி போனதப் பாத வம்புனல்பெ ருது ணங்குவன பருகு நம்மையெ வெருவியே.”* (ஆதவம்.வெயில் : பாதவம் - மரம் ; உணங்குவன - உலர்வன : என்பது கவிஞர் காட்டும் சொல்லோவியம்,மரங்கள் இலையுதிர்த்து திற்கின்றன என்பதை இவ்வளவு அழகாகக் காட்டுகின்ருர். 'நிழலுரு இழந்த வேனிற்குன் றத்து பால சான்ற சுரஞ்சேர் தொருசார்.” என்ற மதுரை காஞ்சியின் அடிகளில் வந்துள்ள கருத்துடன் இக்கருத்து ஒப்பு நோக்கத்தக்கது. வெம்மையின் கொடுமையைக் குறித்து மேலும் கூறும் சில கருத்துக்கள் கற்பனையுடன் மிளிக்கின்றன, தேவர்கள் அப்பாலை நிலத்தின் வெம்மையை ஆற்ருது நிலத்தில் அடியிட்டு நடப்பதில்லை. இயல்பாக நிலத்தில் தோயாத தேவர்களின் பாதங்கள் அப் பாலை நிலத்தின் வெம்மையைத் தொடர்புறுத்திக் கற்பனே செய் திருப்பது நம்மை மகிழ்விக்கின்றது. மேலும், அவர்கள் நிலத்தின் வெம்மையைப் பொறுக்கலாற்ருமையால், மேகமாகிய திரைச் சீலயிட்டுச் சந்திரளுகிய ஆலவட்டத்தினல் விசிறிக் கொள்வர் என்றும் கூறுகின்ருர்." பகலில் அப் பாலே நிலத்தைக் கடக்கும்போது அந்நிலத்தின் வெம்மையாலுண்டான களேப்பைத் தணித்துக் கொள்ளும்பொருட்டே இரவில் பகலவ னின் குதிரைகள் செல்லுவதில்லை. அந் நிலத்தில் மூங்கில்கள் தாழிசை-81, மதுரைக் காஞ்சி-வரி 313.314, தாழிசை-84, தாழிசை-87, தாழிசை-85. I :