பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 8投 முத்துக்களே உதிர்த்தல் அந்நிலத்தின் வெம்மையைக் கண்டு மன முருகிச் சொரிகின்ற கண்ணிரையும், அம் முத்துக்கள் அந்நிலத் தின் உடலில் தோன்றிய வியர்வைத்துளிகள் அல்லது கொப்புளங் களையும் ஒக்கும் என்றுக் கூறும் நயம் இன்பம் தருகின்றது. பாலை நிலத்தின் வெம்மையைப் பொறுக்கலாற்றமல் கருமுகிலும் வெண்மதியும் மெல்லச் செல்லாமல் ஒடலாயின என்று இயல் பான நிகழ்ச்சியைக் கற்பனை நயம் தோன்றக் கூறுவது படித்து மகிழத் தக்கது. ' காடிதனேக் கடத்துமெனக் கருமுகிலும் வெண்மதியும் கடக்க அப்பால் ஒடியிளேத் துடல்வியர்த்த வியர்வன்ருே உகுபுனலும் பணியும் ஐயோ..”* (கடத்தும்-கடப்போம்; முகில்-மேகம்: மதி-நிலா, புனல். மழைநீர்} - என்பது கவிஞரின் கற்பனையில் முகிழ்ந்த சொல்லோவியம், கரு முகில் ஓடுகையில் அதன் வேர்வையே மழை நீராகவும், வெண் மதி ஒடுகையில் அதன் வேர்வையே பனி நீராகவும் பெய்ய லாயின என்ற கற்பனை நம்மை இன்பத்தின் கொடுமுடிக்கே கொண்டுசெலுத்தி விடுகின்றது. கவிஞர் பாலை நிலத்தில் வாழும் சில பிராணிகளையும் காட்டு கின்ருர், பருந்துகளும் புருக்களும் மான்களும் அரவுகளும் ஆங் காங்குக் காணப்பெறுகின்றன. சிவந்த நெருப்பைத் தகடாக அடித்துப் பரப்பியதுபோல் பாலேநிலப் பரப்பு செந்நிறமாக உள்ளது. அந் நெருப்பிலிருந்து திரண்ட புகைக் கூட்டத்தை யொப்ப ஒரு சில இடங்களில் புருக்கள் தென்படுகின்றன.14 பருக நீரின்மையால் செந்நாயின் வாயில் ஒழுகும் நீரைத் தண்ணிர் என்று உவந்து மகிழ்ந்து மான்கள் நக்கி நிற்கின்றன. அருந்தத் தகாத அந்நீரை நக்கினமையால் அவற்றிற்கு விக்கல் எடுக்கின்றன. அரவுகள் மரப்பொந்துகளின்றும் வெளிப்படுங் காட்சி அழகாகச் சித்திரிக்கப்பெறுகின்றது. “ வற்றியபேய் வாயுலர்ந்து வறன்.நாக்கை நீட்டுவபோல் 11. தாழிசை-92. 14. தாழிசை-82. 12. தாழிசை-93, 15. தாழிசை.83. 13. தாழிசை-86,