பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் É8 என்று காட்டுவர். ஈகையில் மேகத்தையும் வென்ற சோழனுடைய புலிக்கொடி துரத்த அதற்கு ஆற்ருது பாண்டியனுடைய மீனக் கொடி ஒளித்துள்ள பாலே நிலத்தைப்போல, வயிற்றின் உட்பக் கத்தில் வருத்தும் பசியின் வெம்மையால் உடலின் வெளிப்பக்கம் தீய்ந்து கரிந்துள்ளது. ஒவ்வொரு பேயின் வயிறும் பசியென்ற பொருளே நிரப்பி அடைத்துவைத்துள்ள குப்பி போன்றது. இதனை ஒரு பேயின் வாய்மொழியாக மிக அழகாகக் கூறுகின்ருர் கவிஞர்

  • சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்ருன் கீழ்நாங்கள் மேகுட் செய்த பாவத்தால் எம்வயிற்றில் பசியைவைத்தான்

பாவியேம் பசிக்கொன்(று) இல்லேம்." (சாவம்-பெரியோர் சாபம் , சதுமுகன்.நான்முகன் ) என்பதாக. தாங்கள் முற்பிறப்பில் இழைத்த பெரும் பாவத்தால் நான்முகன் தம் வயிற்றில் பசியை வைத்து அதற்கேற்ற உண வில்லாமல் செய்து விட்டான் என்று ஓலமிடுகின்றன. அப்பேய்கள்.

  • வேகைக்கு விறகானேம் மெலியா நின்றேம் .

மெலிந்தஉடல் தடிப்பதற்கு விரகும் காணுேம்.' . வேகை-பசித்தி, பற்றி எரிதல் ; விரகு-உபாயம்) என்று அவை முறையிடுவதைக் கேட்டு நாமும் பரிவு கொள்ளு கின்ருேம் ; பச்சாதாபப் படுகின்ருேம். பேய்களின் தோற்றம் மிகவும் அச்சந்தரும் தன்மையது ; விகார வடிவத்தை உடையது. பனங் காடுகள் முழுவதும் அவற்றின் கைகளும் கால்களுமாக ஆயிற்ருே என்று எண்ணத் தோன்றுகின்றது. வாய் பெரிய குகையைவிட மிகப்பெரியது. " வன் பிலத்தொடு வாதுசெய் வாயின ’ என்று கூறுகின்ருர் கவிஞர். இத்தகைய பெரிய வாயால் உணவு கொண்டாலும் நிறையாத மகராசன் கப்பல்” போன்றது அவற்றின் வயிறு. ஒரு நாளேக்கு ஒருநாள் உணவின்மையால் தேய்ந்து போகின்ற உடலைக் கவிஞர்,

  • வெற்றெ லும்பைந ரம்பின்வ லித்துமேல்

வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின.' (வலித்தல்-கட்டுதல் ; ஏய்ந்த-ஒத்த) 19. தாழிசை-216. 21. தாழிசுை-136. 20. தாழிசை.215. 22. தாழிசை-137.