பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

镑4 பரணிப் பொழிவுகள் என்று காட்டுகின் ருர், உடல் மிகவும் இளேத்து எலும்பும் நரம்பு மாய்க் கிடக்கின்றது. அவற்றின் கன்னங்கள் இரண்டும் ஒட்டிக் கிடக்கின்றன ; கன்களோ குன்றுகளின் குகைகளில் தோன்றும் கொன்னிக் கட்டைகள் போல் ஒளிர்கின்றன. அப்பேய்கள் உட்கார்த்தால் அவற்றின் முகத்திற்குமேல் மூன்று முழம் இருக் கும் ; அவற்றின் வற்றலாக உலர்ந்த முதுகிற்கு மரக்கலத்தின் மறிப்புறத்தையே உவமை கூறலாம்."ஒற்றைவான் தொளைப்புற்று: போலுள்ள அவற்றின் கொப்பூழில் பாம்புகளும் உடும்புகளும் உறங்குகின்றன; அத்துணைப் பெரியவை அவற்றின் கொப்பூழ்கள், பேய்களின் உடலின்மீதுள்ள உரோமங்கள் கரிய பாம்புகள் தொங்குவன போலுள்ளன. அவற்றின் மூக்குகளில் பாசிபடர்ந் துள்ளது, அவற்றின் காதுகளில் முன்னதாகவே ஆந்தைகள் புகுந்து பதுங்கிக் கொண்டமையால் நுழைய இடமின்றி வெள வால்கள் வலக்காதுகட்கும் இடக்காதுகட்குமாக உலவுகின்றன. அவற்றின் பற்கள் டிண்வெட்டி இலேயைப்போல் அகன்றும் கொழு வைப்போல் நீண்டும் காணப்படுகின்றன. அவற்றின் உதடுகள் தடித்து நீண்டு மார்பளவும் தொங்குகின்றன. பசிக்கு ஆற்ருது தாக்கில் பாதியும் உதடுகளில் பாதியும் தின்று விட்ட சில பேய்கள் குறைந்த வாயுடையனவாகக் காணப்படுகின்றன. பசிக் கலந்து பாதி நாக்கும், உதடுகளில் பாதியுந்தின்(று) ஒறுவாயா னேம் ' என்ற அவைகளின் முறையீட்டினக் கேட்கும் நாம் உண்மையிலேயே உள்ளம் குழைகின்ருேம், சில பேய்கள் பாம்பு களில் ஒத்திகளைக் கோத்துத் தாலிகளாக அணிந்து கொண்டுள்ளன. இந்த வடிவங்களுடன் காணப்பெறும் பேய்கள் விண்ணே எட்டும் உயரமாக உள்ளன. உயரமான மூங்கில்கட்கும் உயரமானபேய்கட்கும் வேறுபாடு புலப்படவில்லை. பேய்களின் குழவிகட்கும் ஒட்டகங்கட்கும் வேற்றுமை தெரியவில்லை. இதனைக் கவிஞர்,

  • அட்ட மிட்டநெ டுங்கழை காணில்"என்

அன்னே அன்னே'என்(று) ஆலுங்கு ழவிய ஒட்ட ஒட்டகங் காணில்என் பிள்ளையை ஒக்கும் ஒக்கும்'என்(று) ஒக்கலே கொள்வன.' (அட்டம்-அண்மை ; கழை-மூங்கில் : ஆலும்-ஒலியிடும் ; குழவி-குழந்தை ; ஒட்ட-அண்மையில் : ஒக்கலை-இடுப்பு) 23. தாழிசை-217. 24. தாழிசை-142.