பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 67 பச் சிளங் குழவிகளின் தலைகள் இவை எல்லாவிடங்களிலும் தொங்கவிடப்பெற்றிருந்தன. பாண்டிய மன்னர்களை வென்று போரில் இறந்துபட்ட கடகளிற்றின் காதுகளே மாலேயாகத் தொங்கவிட்டு அவர்களின் தலைநகரமாகிய மதுரையிலுள்ள மகரதோரணம் ஊசலாக அமைக்கப்பெற்றிருந்தது.”* அன்னேயின் திருவோலக்கம் : இங்ஙனம் புதிதாகவும் புதிராகவும் அமைக்கப்பெற்ற திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் காளிதேவியின் திருவோலக்கத்தை மிகவும் வியக்கத் தக்க முறையில் காட்டுகின் ருர் கவிஞர். அன்னையின் உருவம் அச்சந் தரும் பான்மையில் சித்திரிக்கப்பெறுகின்றது. ஆதிசேடன் வாசுகி என்ற அரவுகள் அன்னேயின் இணையடிச் சிலம்புகளாகும். அவற்றின் வயிற்றில் முத்துக்கள் பரற்கற்களாகவும், மேற்புறத் தில் விண்மீன்கள் பதிக்கப்பெற்ற இரத்தினங்களாகவும் அமைந் துள்ளன. செப்புக் கிண்ணங்கள் போன்ற கொங்கைகளில் வெண்ணிறு பூசப்பெற்றுள்ளது. யானைத் தோலே ஆடையாக அணிந்து, அதன் குடலையும் பாம்பையும் முறுக்கிக் கச்சாகக் கட்டிக்கொண்டுள்ளாள்.’’ தழல் உமிழ் உரகம் அவளுடைய மேலாடையாக அமைந்துள்ளது. அதற்குமேல் பொன்னணி களையும், முத்து மாலைகளேயும் பவள மாலைகளேயும் அணிந் துள்ளாள் நான்முகன், இந்திரன், ஆனைமுகன், கந்தன் இவர்கள் நால்வரையும் கருவுயிர்த்த திருவயிற்றினேயுடையவள்.' வீரர்களின் குருதியைப் பருகிச் சிவப்புற்ற அவளுடைய திருக்கைகளே யானே களின் மதநீரால் கழுவியதால் அவை கருமை நிறமுடன் தோன்றுகின்றன. அமுதம் கடைந்த காலத்தில் தோன்றிய ஆலத்தையுண்டு நீலகண்டனுன சிவபெருமானே விடம் பற்ருமல் தனது அதரபானமாகிய அமுகத்தால் தணிக்கக் கூடியவள். தன் கடைக்கண் பார் வ. படுதலால் காலகாலனுக்கு உண்டாகும் காமநோயைத் தணிவிக்கும் இனிய சொற்கள் பிறக்கும் திருவாயினே யுடையவள்.* மதியையொத்த அவளுடைய நெற்றியில் பகலவனே யொத்த சிந்துரப்பொட்டு தி கழ்கின்றது.** இதில் குலோத்துங்கனின் தந்தையின் வழியையும் (சந்திரகுலம்) தாயின் வழியையும் (சூரியகுலம்) இணைத்துப் போற்றப்பெறும் நயம் உணர்ந்து மகிழத் தக்கது. 34. தாழிசை.107. 39. தாழிசை-126. 35. தாழிசை-122. 40. தாழிசை-128. 36. தாழிசை-i:24, 41. தாழிசை 129. 37, தாழிசை-125. 42. தாழிசை-130. 38. தாழிசை-127. 43. தாழிசை-131.