பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பரணிப் பொழிவுகள் இங்கனம் அடியிலிருந்து முடிதோறும் அவயவங்களே வருணித்த கவிஞர் பெருமான் அன்னேயின் பேருருவச் சிறப்பினை இரண்டு தாழிசைகளால் கூறுகின்ருர், உலகிலுள்ள மலைகளைக் காதணிக ளாகவும் அணிவாள் ; விரும்பினுல் அவற்றைக் கோத்து இரத்தி ைமாலையாகவும் சூடுவாள்.** சில சமயம் அம்மலைகள் அவளுடைய திருக்கைகளில் அம்மானேக் காய்கள், பந்துகள், கழங்குகள் போன்ற விளையாட்டுக் கருவிகளாகவும் அமையும்.45 அன்னே விரும்பின் ஆகாதது ஒன்றுண்டோ ? மலைகளின் திங்கன் வைத்து அவளுடைய திருவுருவத்தை நம் மனதில் பேருருவமாக அமைக்கும் கவிஞரின் கலைத்திறம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது. அன்னே வழிபாடு : தேவியின் திருக்கோயில் மக்கள் உலகமும் பேய்கள் உலகமும் சந்திக்கும் பொது இடமாக அமைத்த கவிஞரின் கற்பனைத் திறன் போற்றற்குரியது. தேவியை வழிபடுவோர் அவளுடைய திருக்கோயிலைப் பெருக்கி, பக்ங்குருதி நீtதெளித்து, கொழுப்பாகிய மலர்களேத் துரவி, பிணங்களைச் சுடும் சுடலையிலுள்ள விறகு விளக்குகளே எம்மருங்கும் ஏற்றி வைப்பர். அன்னேயை வழிபடும் வீரர்களின் துதிக்கும் ஒலி கடலொலிபோல் எங்கும் முழங்கும். இதனைச் சயங் கோண்டார், " சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாக பலியாக உறுப்பரிந்து தருதும் என்று பரவும்ஒலி கடல்ஒலிபோல் பரக்கு மாலோ.”* தறுகண்-அஞ்சாமை, பரவுதல்-துதித்தல் பரக்கும்-பரவும்). என்ற தாழிசையால் விளக்குகின்ருர், " அன்னேயே, எருமைக் கடாவைப் பிளந்துதரும் பசுங்குருதியைப் பலியாக ஏற்றுக்கொள் வாயாக’ என்ற வீரர்களின் குரலொலிகள் பேரிடி இடித்தாற். போல எண்திசைகளேயும் வான் முகட்டினையும் பிளந்து முழங்கும்; அதனையொட்டி தமருகங்களின் ஒலிகளும் அதிகமாக எழும்.#1. வீரர்கள் புரியும் வேள்வி விநோதமானது. தங்கள் விலாவெலும் புகளே ஒவ்வொன் ருகப் பிடுங்கி அவற்றைச் சமித்தாகவும், குருதியை நெய்யாகவும் ஓமம் வளர்த்து வேள்வி புரிந்து தேவியை 44. தாழிசை-132. 46. தாழிசை-109 45. தாழிசை.132, 47. தாழிசை-114