பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 89 வழிபடுவர். அன்னையை வழிபடும் சில வீரர்கள் தங்கள் சிரங்களை அரிந்து அவள் கையில் கொடுப்பர். அத்தலேகள் அவளே ப் பரவும் , தலகுறைந்த உடலங்கள் அவளேக் கும்பிட்டு நிற்கும்.

  • அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ

அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.”* (அணங்கு.காளி ; கொற்றவை.காளி ; பரவும்.துதிக்கும்! என்பது கவிஞரின் சொல்லோவியம். பலிபீடத்தில் அரிந்து வைக்கப்பெற்ற வீரர்களின் தலைகளே ஆண்டலேப் புட்கள் அணுகும்பொழுது அவை அப்புட்களை ைெருட்டியோட்டும்." பலிக்கடன் செலுத்துவோர் தங்கள் தலைகளை யரிந்த பின், களிப் பால் துள்ளும் உடல்களைப் பேய்கள் தீண்டுவதற்கு அஞ்சி அவை நிலத்தில் விழும் வரையிலும் அவற்றைத் தொடர்ந்து திரியும்.' திருக்கோயிலருகில் மேலும் சில காட்சிகளைக் காட்ட நினைக் கின்றேன். மூங்கில்களின் நுனியில் தொங்கும் வீரர்களின் தலைகளைக் கண்டு யாவருக்கும் அச்சத்தை விளைவிக்கும் பேய் களும் அவற்றின் அருகில் செல்ல அஞ்சும் அவற்றின் எளிய நிலைமையினைக் கண்டு அத்தலைகள் நகைத்து நிற்கும் ; இதல்ை பேய்கள் விடியும் வரையிலும் உறங்காம விருக்கும்." பலிக் கடன் செலுத்துவோரால் தொங்க விடப்பெற்ற தலைகளையுடைய சில மூங்கில்கள் பாரம் தாங்கமாட்டாமல் வளைந்து குருதிப் பெருக்கில் மூழ்கி யிருக்கும். அவை இறந்து கிடக்கும் வீரர்களின் உடல்களைக் கவர்வதற்குக் காலன் போட்ட தூண்டில்களேப்போல் காட்சியளிக்கும்.

  • அரிந்ததலே யுடன்அமர்ந்தே ஆடுகழை அலேகுருதிப் புனலின் மூழ்கி இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற

நெடுந்துண்டில் என்னத் தோன்றும்.’’** (அமர்ந்து பொருந்தி ; கழை-மூங்கில் ; காலன் யமன்) என்பது கவிஞரின் சொல்லோவியம். 48. தாழிசை-110 51. தாழிசை-113. 49. தாழிசை-111 52. தாழிசை-117. 50. தாழிசை.112 53. தாழிசை-118.