பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 71 இந் நெடும் பேய் புரிந்து வருகின்றது. இந்த நெடும் பேயின் மூலம் தேவியின் செவ்வியறிந்து இமயத்தினின்றும் போந்த ஒரு முதுபேய் அன்னேயை அணுகி அவள் அடிக் கமலங்களே வாழ்த்தித் தன் பிழையைப் பொருத்தருளுமாறு வேண்டுகின்றது. அப் பேய் இழைத்த பிழை என்ன ? அஃது இமயம் சென்று வாழ்ந்த தற்குக் காரணம் என்ன ? சுரகுரு என்ற சோழ அரசன் ஒரு பேய் மகனே யமன்பால் தூது அனுப்பின்ை. அத் தூதுவன் தான் உண்பதற்காக அறுத்து வைத்த சிரத்தை ஒரு பேய் கள வாடித் தின்று விட்டது. சீற்றங்கொண்ட காளி தேவி அத்திருட்டுப் பேயின் சிரத்தை அறுத்து அப்பேய் மகனுக்கு ஈடுசெய்து வைத் தாள். அத்திருட்டுப்பேயின் செயலுக்கு உளவாளிகளாக இருந்த சில பேய்கள் அன்னேயின் சீற்றத்துக்கும் சுரகுருவின் சீற்றத் துக்கும் அஞ்சி தலைமறைவாக வாழ்ந்தன. அப்பேய்களுள் ஒன்றுதான் இமயத்தில் ஒடியொளிந்து வாழ்ந்து முதற் குலோத் துங்கன் காலத்தில் காளிதேவியை அடைகின்றது. அதன் வேண்டு கோளின்படி அன்னேயும் பிழை பொறுத் தருள் கின்ருள்.82 தேவியின் இசைவுபெற்று தான் இமயத்தில் வாழ்ந்த காலத்தில் கற்ற சில இந்திர சால வித்தைகளைக் கண்டோர் வியப்புறுமாறு காட்டுகின்றது முது பேய். முதலில் வலக்கையில் யானையின் சில துதிக்கைகளே வைத்துக்கொண்டு அவற்றை இடக்கையில் மாற்றியவுடன் அவை மதம் பொழியும் யானைத் தலைகளாக மாறியதைக் காட்டுகின்றது. அடுத்து, இடக் கைகளிலிருக்கும் யானைத் தலைகளின் வாயிலிருந்து பெருகும் குருதியைப் பேய்கள் குடித்து இடிமுழக்கம்போல் கொக்கரிப் பதையும், தலையறுப்புண்ட யானைகளின் உடலங்கள் குருதி வெள்ளத்தில் மிதப்பதையும் காட்டுகின்றது." அதன்பிறகு அப் பேய் குலோத்துங்கனின் பரணிப் போரையே காட்டத் தொடங்கு கின்றது. அந்த மாயப் போரில் இறந்துபட்ட குதிரைகளும், வெட்டுண்டு கிடக்கும் வீரர்களுடல்களும், வெருவியோடும் யானை களும், பெருகியோடும் குருதி வெள்ளமும் காணப்படுகின்றன." குருதி வெள்ளத்தில் அறுப்புண்ட தோள்கள் அடித்துச் செல்லப் பெறுகின்றன ; அறுபடாத குடல்கள் மிதக்கின்றன; முறிந்து வீழ்ந்த கால்களே நரிகள் இழுத்துச் செல்கின்றன ; மூளைச் சேற்றில் வீரர்கள் வழுக்கி வீழ்கின்றனர். இந்தக் காட்சியில் பேயலாத சில புதிய ரகப் பேய்களும் காணப்படுகின்றன." 61. தாழிசை-157. 65. தாழிசை-165, 62. தாழிசை-160. 66. தாழிசை-166. 63. தாழிசை-162, 67. தாழிசை-167, 64. தாழிசை-163.