பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 73 வேண்டியதில்லை என மொழிகின்றன. அப்பேய்கள். குலோத் துங்கனுக்குக் கீழுள்ள சிற்றரசர்கள் முறை தவருமல் திறைப் பொருள்களைச் செலுத்திவருவதால், அவன் நாட்டில் போர் ஏற்படவில்லை. இதனுல் தங்கள் பசிப் பிணி நீங்கவில்லே என்கின்றன பேய்கள். " அகளங்கன் நமக்கிரங்கான் அரசர் இடும் திறைக்கருள்வான் அவன்றன் யானே நிகனம்பூண் டன வடியேம் நெடும்பசியால் அறவுலர்ந்து நெற்ருய் அற்றேம்.’’’ (அகாங்கன் முதற் குலோத்துங்கன் : அ + களங்கன் குற்ற மற்றவன் , திறை-கப்பம் ; நிகளம்.யானே கட்டும் சங்கிலி : அற்றேம் அழித்தேம்} என்பது கவிஞர் காட்டும் சொல்லோவியம். தம்முடைய மூக்கின் அருகே நின நீர் நாறுவதாலும், புலால் மனம் வீசுவதாலும், உதடுகள் துடிக்கும்படி ஈக்கள் மொய்ப்பதாலும் அவற்றை தன்னிமித்தங்களாகக் கொண்டு உயிர் வாழ்ந்திருப்பதாக உரைக்கின்றன. அப் பேய்கள்." அவ்வமயம் இமயத்தினின்றும் போத்த முதுபேயும் தான் கலிங்க நாட்டின் வழியாக வருங்கால் ஆண்டுக் கண்ட தீநிமித் தங்களைக் கூறுகின்றது. களிறுகட்குக் கொம்பு முறிதல், பிடிகட்கு மருப்பு முளேத்தல், ஒளி வீசி எரியும் விளக்குகள் கறுத்து எரிதல், பருவமுகில்கள் செங்குருதியினேப் பெய்தல், 18 முரசங்கள் தாமே முழங்குதல், இரவில் வானவில் தோன்றுதல், ஊரிலிலுள்ள இல் லங்களில் கோட்டான்கள் தோன்றுதல், நரிகள் ஊரேயிடுதல், வேள் வித் தீ சுடலேத்திபோல் நசறுதல், பூ மாலைகள் புலால் நாற்றம் வீசுதல், இரத்தின மாலைகள் ஒளியிழக்தல், ஒவியங் களில் வியர்வை நீர் தோன்றுதல், தடாகங்களில் சுரக்கும் நீர் செங்குருதிபோல் தோன்றுதல் ஆகியவற்றைத் தான் கண்ட திதிமித்தங்களாகக் கூறுகின்றன. அவற்றைக் கேட்ட காளி தேவி சோதிடப் பேய் கனவிலும் நனவிலும் கண்டனவற்றைக் கூறி குலோத்துங்கனுல் ஒரு பரணிப்போர் நடைபெறப் போவதாக உரைக்கின்ருள். பேய்கள் அவற்றைக் கேட்டு மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடுகின்றன. 73. தாழிசை-218. 76. தாழிசை-223. 74. தாழிசை.219. 77. தாழிசை-224, 75. தாழிசை-222.