பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*4 பரணிப் பொழிவுகள் கலிங்கப் பேயின் வருகை , குலோத்துங்களுல் ஒரு பரணிப் போர் உண்டு என்று கூறிய தேவி அக் குலோத்துங்கனின் பெருமையைக் கூறுகின்ருள். இத்திலேயில் ஒரு பேய் ஓடோடியும் அத்து தான் தேரில் கண்ட கலிங்க நாட்டில் மூண்ட போரை எடுத்துரைக்கின்றது. கலிங்க வீரர்களின் குருதியை "டானிக்’ காகப்பருக்கச் செய்யுமாறு கூவுகின்றது. இந்த இடத்திலுள்ள சில தாழிசைகள் பன்முறை படித்து இன்புறத்தக்கவை.

  • உணங்கல் வயிறு குளிர

உவத்து பருக பருக கணங்கள் எழுக எழுக கணங்கள் எழுக எழுக.”* ! உணங்கல்-வத்துதல்; பகுக.பருகும்பொருட்டு: கணங்கள். பேய்க் கூட்டங்கல் (வினி);

  • வயிறுகள் என்னிற் போதா

வாய்களோ போதா பண்டை எயிறுகள் என்னிற் போதா - என்னினும் ஈண்டப் போதும்.' (ஈண்டுதல்-விரைதல்; போதும்-செல்வோம்) " சிரமலை விழுங்கச் செந்நீர்த் திரைகடல் பருக லாகப் பிரமண வேண்டிப் பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும்.' (சிரம்-தலை , செந்நீர்-குருதி) என்று கலிங்கப்பேய் தந்த செய்திகள் தம் காதுகளில் பட்டதும் அப்பேய்கள் களிப்பின் மிகுதியால் பிணங்களைத் தின்றனபோல் உடல் பூசித்து, ஒன்றன்மேல் ஒன்று விழுந்து 'ஒகை சொன்ன பேயின் வாயை ஒடி முத்தம் உண்ணுமே.”* சில பேய்கள் தங்கள் கையிலுள்ள குழவிகள் நிலத்தில் விழும்படித் தங்கள் கைகளைத் தட்டித் துணங்கைக் கூத்தாடும் , வள்ளைப் பாட்டுக் கண்ப் பாடி ஆடவருமாறு ஏனைய பேய்களை அழைக்கும்.” 78. தாழிசை-303, 81. தாழிசை.308, 79. தாழிசை.305, 82. தாழிசை-309, 80. தாழிசை-306,