பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 75 " எனஉரைத்த தேவி வாழி வாழி யென்று வாழ்த்தியே களுஉரைத்த பேயி கனக்க ழுத்தி னிற்கொ டாடுமே.”* [ எளு-குலோத்துங்கன் காஞ்சியில் வந்து தங்கின செய்தியை, உய வாழ்த்தியதையும் களுத்திறம் உரைத்த - கழுத்தைக் கட்டிக்கொண்டு களிப்பிளுல் டிவதையும் காட்டுகின்ருர், கூளி கூறியவை: கலிங்கப் போரைக் கூறுமாறு கேட்ட காளி தேவிக்குக் கலிங்க நாட்டினின்றும் வத்த பேய் முதலில் போர்க் காரணத்தை எடுத்துரைக்கின்றது. குலோத்துங்கன் பாலாற்றங் கரைக்குப் பரிவேட்டையாடச் செல்லல், காஞ்சியில் தங்கினமை போன்ற செய்திகளைக் கூறியும், கலிங்கநாட்டை ஆண்ட அனத்த பன்மன் திறை கொடாததால் போர் திகழ்ந்தமை கூறியும் முதற் பொழிவின் பொழுதே போரின் காரணத்தைக் குறிப்பிட்டேன். அதனை ஈண்டு நினைவுகூர வேண்டுகின்றேன். வேட்டையாடச் சென்ற செய்தி காளியின் வாய்மொழியாகக் கூறப்பெறுகின்றது. ஈண்டு நயமான ஒரு காட்சியை மட்டிலும் கூற விரும்புகின்றேன். வேட்டம்மீது செல்லும் மன்னன் நால்வகைப் படையும் அரசரும் பிறரும் சூழக் களிறுTர்ந்து செல்லுகின்ருன். இக் காட்சியைத் தெருவின் இருபுறமும் மகளிர் திரண்டு நின்று காண்கின்றனர். இதனேக் கவிஞர்,

  • எங்குமுள மென்கதலி எங்குமுள தண்கமுகம்

எங்குமுள பொங்கும் இளநீர் எங்குமுள பைங்குமிழ்கள் எங்குமுள செங்குமுதம் எங்குமுள செங்க யல்களே.”* (கதலி-தொடைகளாகிய வாழை; கமுகு-கழுத்துக்களாகிய பாக்கு மரம், இளநீர்-கொங்கைகள்: குமிழ்-மூக்குகளாகிய குமிழம் பூக்கள்; குமுதம்-வாயிதழாகிய செவ்வாம்பல்; கயல்-கண்களாகிய மீன்கள் ) என்று அழகுற எடுத்தோதுவர். யாண்டுத் திரும்பினும் அழகிய மகளிரே காட்சியளித்து நின்றமையின் அவர்களேயே கூருமல், 83. தாழிசை-310. 84. தாழிசை-295,