பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 77 அமுதமாக இருப்பினும் தனித்துண்ணும் வழக்கம் தமிழரிடம் இல்லை என்று கூறுவர் வள்ளுவப் பெருத்தகை. அவரே, " செல்விருந்து ஓம்பி வருவிருத்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.' என்று முகமலர்ச்சியையும் விருத்தோம்பும் பண்பினையும் பாராட்டுவர். கலிங்கப் போரில் சில வீரர்கன் கடமையுணர்ச்சி யுடன் போர்புரிந்து கணிப்புடன் உயிர்துறந்தமையால் அவர்களின் |றந்த ஆல்களும் முகமலர்ச்சியுடன் விளங்கின. இதற்குக் விஞர் கூறும் புனைந்துரை விருத்தோம்பும் மேலோசின் உயச் கண்பினே விணக்கி நிற்கின்றது. இவர்களின் உடலங்கஇசப் பருத்துக்களும் கழுகுகளும் கொத்தித் தின்கின்றன. தாம் இறந்த பிறகும் விருத்தோம்பும் பேற்றினேப் பெற்ருேமே என்று வீரர்கள் முகமலர்ச்சியுடன் காணப்பெறுவதாகக் கூறுவது கவிஞரின் புனேத்துரை: கற்பனைச் சிறப்பு. இக்காட்சியைச் சயங்கொண்டார், * விருத்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருந்தினமும் கழுகினமும் தாமே புண்ணப் பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்.” (வறியவர்-ஏழையர்; மேலோர்-இல்லறத்தில் உயர்த்தோர் ; பதுமம்-தாமரை) என்று காளியின் வாய்மொழியாகக் கவிஞர் விளக்குவதைக் கண்டு மகிழ்க. அடுத்து, உலோபிகளின் தன்மையைக் காட்டுகின் ருச் கவிஞர். இன்றும் உயிரை விட்டாலும் உடைமையை விடாத உலோபிகளைக் காண்கின்ருேமன்ருே ? ஒரு சில மூடர்கள் அவர் கஆளச் சுற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கின்ருேம். போர்க் களத்தில் குற்றுயிராகக் கிடக்கும் வீரர்களின் அருகே நரிக் கூட்டங்கள் தங்கியுள்ளன. தம் உயிர் போகுமளவும் அந்நரி களுக்குத் தம் உறுப்புக்களே அவ்வீரர்கள் தருவதில்லை.

  • சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்

சாருநர்போல் வீரருடல் தரிக்கும் ஆவி போமளவும் அவரருகே இருந்து விட்டுப் போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்.”* (நச்சி-விரும்பி; சாருநர்-அடைவோர்; தரித்தல்-நிலைபெற்றி ருத்தல்; ஆவி-உயிர் ; புணர்ச்சி-கூட்டம்) 85. குறள்-86. 86. தாழிசை-477. 87. தாழிசை-478.