பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 79 லிட்டுக் கொண்டு கதிரவன் ஒளி மறையும்படி விசும்பு முழுவதும் பரவிப் பறத்தன. இதனேக் கம்ப நாடன், புகலரும் முழையுள் துஞ்சும் பொங்குளைச் சீயம் பொன்றி உகலரும் குருதி கக்கி உள்ளுற நெரித்த ; ஊழின் அகவிரும் பரவை தான அசற்றுறு குரல வாகிப் பகலொளி கரப்ப வானே மறைத்தன பறவை எல்லாம்.'" (புகலரும்-நுழைவதற்கு அரிய, முழை-குகை; பொங்கு உ8ள. மிகுதியான பிடரி மயிர்; உகலகும்-சித்துதல் இல்லாத; குருதி. இரத்தம்; தெரிந்த-தொறுங்கின: ஊழின்-பிரளயகாலத்தில்: பரவை-கடல், அசற்றுறு-கதறுகின்ற கரப்ப-மறைக்க) என்று காட்டுவன். இங்ஙனமே சேது கட்டுங்காலத்கில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளினுல் இத்தகைய காட்சிகளைக் காணலாம். காற்ருடி போலத் திரியும் வானரக் கூட்டம் தம் கையில்ை மலைகளைப் பேர்த்து எடுத்துக் கடலில் வீசி எறிகின்றன. அப்போது அம் மலையிலுள்ள பெரும் பாம்புகள் மறங்கிளர் யானைகள் தம் வயிற்றில் கிடக்க உணர்வின் றி வாய் திறந்த வண்ணம் உறங்கிக் கிடக்கின்றன. இதனேக் கவிஞன்,

  • கறங்கெனத் திரியும் வேகக்

கவிக்குலம் கையின் வாங்கிப் பிறங்கிருங் கடலிற் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் மறங்கிளர் மான யானை வயிற்றின வாக வாய்சோர்த்(து) உறங்கின; கேடுற் ருலும் உணர்வரோ உணர்வி லாதார்.' (கறங்கு-காற்ருடி, கவிக் குலம்.வானரக் கூட்டம்; பாந்தள்: பாம்பு.) என்ற பாடலில் சித்திரித்துக் காட்டுவன். உணர்ச்சியில்லாத வர்கள் எவ்வளவு கேட்டினை அடைந்தாலும் அவர்களிடம் 90. கம்பரா. சுந்தர. கடல்தாவு, 4. 91. கம்பரா. யுத்த. சேதுபந். 20,