பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் "உலகம் 88 கையால் நிலத் தடவிக் கலத்தைக் காணுது கதறியழுகின்றது. இதனைப் பத்தி விசாரிப்போர் கண்டு,

  • ஊணு தரிக்கும் கள்ளப்பேய்

ஒளித்துக் கொண்ட கலந்தடவிக் காணு தரற்றும் குருட்டுப்பேய் கைக்கே கூழை வாரீரே.' (ஊண்-உணவு; ஆதரிக்கும்-ஆசைப்படும்; கலம்-பாத்திரம்; அறற்றல்-கதறியழல் ) என்று பேய்க்குக் கையில் கூழை வார்க்குமாறு கூறுகின்றனர். செட்டி நாட்டுப் பகுதிகளில் நகரத்தார் அளிக்கும் விருத்துகளில் பணியாற்றும் பந்தி விசாரிப்போர் போல பேய் விருத்திலும் அத் தகையோர் இருந்தனர் போலும் ! ஒர் ஊமைப்பேய் உண்ணும் காட்சி நகைச்சுவை தருகின்றது. வாய் பேச முடியாத அப்பேய் அதிகப் பசியோடு காணப்படு கின்றது. அது கலத்தில் இட்ட கூழ் தனக்குப் போதாதென்றும், மேலும் தன் கைகளில் வார்க்குமாறும் கையால் சைகை காட்டு கின்றது. உடனே,

  • பையாப் போடு பசிகாட்டிப்

பசலை நிறைந்த கூழ்காட்டிக் கையால் உரைக்கும் ஊமைப்பேய் கைக்கே கூழை வாரீரே.' (பையாப்பு-துன்பம்; பதலை-தாழி) என்று பந்தி விசாரிப்போரிடமிருந்து கட்டளை பிறக்கின்றது. ஒரு மூடப்பேயின் அறிவற்ற செயல் நம்மை நகைக்க வைக் கின்றது. இப்பேயின் பாத்திரம் ஒட்டையாக இருந்தது. அதில் வார்க்கப்பெற்ற கூழ் ஒழுகியது. பாத்திரத்தில் ஒட்டையுள்ளதா என்பதைக் காண அப்பாத்திரத்தைத் திருப்பிப் பார்க்கின்றது. இதளுல் பாத்திரத்தில் எஞ்சியிருந்த கூழும் கொட்டிப் போகின்றது. இதனேக் கண்டவர்கள்,

  • பொல்லா வோட்டைக் கலத்துக்கூழ்

புறத்தே யொழுக மறித்துப் பார்த்து 116. தாழிசை-569. 117. தாழிசை-570,