பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வரலாற்றுக் குறிப்புக்கள் நான்காம் பொழிவு தமிழன்பர்களே ! தாய்மார்களே ! ணைக்கம். இன்று நடைபெறுவது கலிங்கத்துப் பரணி பற்றிய தான்காம் சொற்பொழிவு. சென்ற சொற்பொழிவில் தாம் பேய்களின் உலகில் உலவிளுேம். பேய்களின் உலகி கனயும் மக்கள் உலகினேயும் இணைத்துக் காட்டும் கவிஞரின் கதி துட்பத்தை எடுத்துக் காட்டினேன். காளிதேவியின் திருக்கோயிலே மக்கள் உலகமும் பேய்களின் உலகமும் சத்திக்கும் இடமாக அமைத்துள்ள கவிஞரின் கற்பனைத் திறனே எடுத்து விளக்கினேன். பெரும்பாலும் இங்கு வரலாற்றுக் குறிப்புக்களாகக் கிடைக்கும் செய்திகள் யாவும் இமயத்தினின்றும் போத்த முதுபேயின் மூலமாகவும், அன்ன காளி தேவியின் வாயில் வைத்தும் துவலப்பெறுகின்றன. சில செய்திகளைக் கவிஞரின் கூற்ருலும், கலிங்க வேந்தனின் அமைச்சனும் படைத் தலைவனுமான எங்கராயனின் கூற்ருலும் அறிகின்ருேம். வரலாற்றின் இன்றியமையாமை: அன்பர்களே, இவ்விடத்தில் ஒரு முக்கிய குறிப்பொன்றை வற்புறுத்த விரும்புகின்றேன். வரலாற்று ஆராய்ச்சி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக மிக இன்றியமையாதது என்பதே அது. முன்னேர் ஒழுகிக் காட்டிய உயர்ந்த தெறிகளேயும், அன்னேர் கொண்டிருந்த உயர்ந்த பண்பு களையும், பின்ைேர்க்கு எடுத்துக் காட்டுவது வரலாற்று நூல் என்பதை நீங்கள் அறிவீர்கள். வையத்துள் வாழ் வாங்கு வாழ் வதற்கு வழியமைத்துத் தருவது வரலாற்றுத் துறையாகும். இது கருதியே நாகரிகம் எய்தியுள்ள மேற்புல அறிஞர்கள் தம் நாட்டின் உண்மை வரலாறுகளே ஆய்ந்து பல நூல்கள் வாயிலாக வெளி பிட்டு வருகின்றனர். ஆய்வுக் கட்டுரைகளாக வடித்துப் பருவ இதழ்களின் வாயிலாகப் பல்லோர் அறியச் செய்கின்றனர். இவற்ருல் அந்நாடுகள் எய்தும் பயன்கள் வெள்ளிடைமலையாகும்.