பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் &7 மேஞடுகளில் எத்தனையோ விதமான வரலாற்று நூல்கள் தாடோ றும் வெளி வந்து கொண்டிருப்பதைக் காணத்தான் செய்கின் ருேம்.அவை அவர்களுடைய தாய் மொழியில் வெளியிடப்பெறுவ தாலும், கல்வியறிவுள்ளவர்கள் அனைவரும் அவற்றைப் படித்து வருவதாலும் அந்தாட்டு மக்களிடையே முன்னேற்றத்தைக் காண முடிகின்றது. எனவே, ஒரு நாட்டு மக்களுடைய வரலாறு அத் தாட்டு மக்களின் தாய் மொழியில் வெளியிடப்பெற்ருல், அ.து அன்னேரின் அறிவு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பல்லாம் குனும் உறுதுணை புரியும் என்பதற்குச் சிறிதளவும் ஐயம் இல்லே. நாடு விடுதலை பெற்ற பிறகு எம்மருங்கும் மொழிப்பற்று ஓங்கி வரும் இற்றை நாளில் இதனை வற்புறுத்துவது கொல்லத் தெரு வில் ஊசி விற்க முயலும் செயலோடொக்கும் என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன். வரலாந்து மூலங்கள்: ஒரு நாட்டு வரலாற்றை அறிந்துகொள் வதற்கு அத்தாட்டுக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், கோயில் கள், அங்குக் காணப்பெறும் சிற்பங்கள், நாணயங்கள், இலக்கி யங்கள் ஆகியவை மூலங்களாக அமைகின்றன என்பதனை நாம் அறிவோம். அவற்றுள் காணக் கிடக்கும் ஒரு சில குறிப்புக் களைக் கொண்டே வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்று நூலே வரைவர், அக்கால மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு, வாணிகம் முதலிய பல்வேறு செய்திகளை அந்நூலின்மூலம் அறிய லாம். கலிங்கத்துப் பரணி'யிலிருந்து அக்கால சோழர் வரலாறு, மக்கள் வாழ்க்கை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். இச் செய்திகள் கல்வெட்டுக்கள் போன்ற மூலங்களால் அறியப்பெறும் செய்திகளால் வலியுறுகின்றன. சோழ வளநாடு சோறுடைத்து’ என்ற பழமொழியை அறிவோம். சோழ நாட்டில் பசியும் பட்டினியும் இன்றி வ:சியும் வளனும் பெற்று மகிழ்ந்தனர் மக்கள். அந்நாட்டு வளத்தை,

  • ஒருபிடி படியும் சீரிடம்

எழுகளிறு புரக்கும் நாடு.”* என்று இலக்கியம் கூறுகின்றது. சைவமும் தமிழும் தழைத் தோங்கியது சோழர்கள் காலத்தில்தான். விண்ணே அளாவும் கோபுரங்கள் அமைந்த கோயில்கள் எழுப்பப்பெற்றதும், சிற்பக் கலைகள் செழிப்புற்றதும் அவர்கள் காலத்தில்தான். அரசியல் அமைப்பில் பல்வேறு திருத்தங்கள் அமைக்கப்பெற்றமையும், 1. புறம் - 40.