பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் 89 கரிகாலனை நோக்கி, 'மன்னனே, பண்டைக்காலத்தில் பராசரர் புத்திரராகிய வியாசமுனிவர் பகர்த்த பாரதக் கதையைக் கரிமுகக் கடவுள் தன் கொம்பினுல் எழுதியதை நீ அறிவாயன் ருே ? அங்ங்ணமே, நான் சோழர் வரலாற்றை இப்போது உனக்குக் கூறு வேன். அதனே இமயமலையில் எழுதுவிப்பாயாக’ என்று உரைக்க, கரிகாலனும் திருமால் முதல் முதற் குலோத்துங்கன் வரை நாரதர் கூறிய வரலாற்றை இமயத்தில் பொறிக்கின்றன்." நாரதரும் தம் இருப்பிடம் ஏகுகின்ஞர். வரலாற்றுடன் இதிகாசச் செய்திகளும் கலந்து வருவதால் அதிலுள்ள செய்திகள் யாவும் உயர்வு நவிற்சியாகவும் கற்பனையாகவும் அமைந்துள்ளன. இந்த வரலாற்றை இமயத்தில் வாழ்ந்த முதுபேய் கற்று வந்து காளிக்கு உரைப்பதாக அமைக்கின் ருர் கவிஞர். இதுவே "இராச பாரம்பரியப் பகுதி’யாகக் காவியத்தில் அமைந்துள்ளது. அவதாரம்' என்ற பகுதியில் பாட்டுடைத் தலைவனுகிய முதற் குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி கற்றல், " படைக்கலப் பயிற்சி, முடிபுனைதல் முதலிய செய்திகள் " விரித்துப் பேசப் பெறுகின்றன. குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாகவே பேசப்படுகின் ருன்.

  • அன்றிலங்கை பொருதழித்த அவனே அப் பாரதப்போர் முடித்துப் பின்னே வென்றிலங்கு கதிராழி விசயதரன்

எனஉதித்தான் விளம்பக் கேண்மின்.' (ஆழி.சக்கரம், விசயதரன்-குலோத்துங்கன்) என்று காளிதேவியின் வாயில் வைத்துக் குலோத்துங்கன் வர லாறு கூறப்பெறுகின்றது. இலக்கியமாதலால், இப்பகுதியிலுள்ள செய்திகள் யாவும் கற்பனை நயம் செறிய உயர்வு நவிற்சிகளாகவே அமைந்துள்ளன. என்ருலும், உண்மையான வரலாற்றுக் குறிப் புக்கள் தெளிவாகவே அமைந்து கிடக்கின்றன. இவற்றைத் தவிர காளிக்குக் கூளி கூறியது” என்ற பகுதியில் குலோத்துங்கனின் திருவோலக்கச் சிறப்பு, அவன் கலிங்கநாட்டின்மீது தண்டெடுத் துச்சென்ற காரணம், படைகள் கலிங்கவீரர்களுடன் பொருது வென்றமை போன்ற செய்திகள் தெளிவாக எடுத்தோதப்பெறு 5. தாழிசை-180-185. 9. தாழிசை-244-247. 6. தாழிசை-232-238. 10. தாழிசை-258-268. 7. தாழிசை-240-242. 11. தாழிசை-232. 8. தாழிசை-243, 248.