பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் § { பஞ்சபன், திலீபன், துரங்கெயிவெறித்த தொடிதோட் செம்பி யன், உபரிசரன், பாரதப் போரில் பங்குகொண்ட சோழன், சூரவர்க்கன்' ஆகியோர் வாழ்த்தவர்களாகக் கூறப்பெறு கின்றனர். இவர்கள் யாவரும் இதிகாச உலகைச் சேர்ந்தவர்கள். சோழர்கள் எவ்வுயிரிடத்தும் இரக்கமுடையவர்கள் என்பதற்கும் நேர்மை திறம்பா உள்ளத்தினர் என்பதற்கும், மனுநீதிச் சோழ இனப்போல் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தவர்கள் சிபியும் மாத்தாதாவும் ஆவர். மசந்தாதா புவியும் மானும் ஒரு துறையுள் ஒன்ருக நின்று நீள் பருகச் செய்தான் என்பதை,

  • ஒருது றைப்புனல்சி னப்புலியும்

மானும் உடனே உண்ண வைத்தஉர வோன்.”* (துறை - களம் ; புனல் - நீர்) என்று பரணி போற்றுகின்றது. அங்கணமே, புறவு அடைந்த துன்பத்தை நீக்குவதற்காகத் தன் தசையைத் தராசுத் தட்டில் அரித்து வைத்த சிபியின் வரலாற்றை,

  • உடல்க லக்கறவ ரிந்துதடை யிட்டும் ஒருவன் ஒருது லேப்புறவொ டொக்கதிறை

புக்க புகழும்.’’’ (கலக்குஅற-மனக்கலக்கம் நீங்க, துலே-துலாத்தட்டு; புறவுபுரு; நிறை-எடையாக) என்று புகழ்ந்துரைக்கின்றது. மேலும், சோழர்கள் காலத்தில் சிறந்த புலவர்கள் அர சவையை அணி செய்தனர் என்ற செய்தியும் இந்நூலால் அறியக் கிடக்கின்றது. அப்புலவர்கள் பல்வேறு சிறந்த நூல்களை யாத்துத் தமக்கும் தம் நாட்டிற்கும் ஈடற்ற புகழைத் தேடிக்கொண்டனர் என்பதனையும் அறிகின்ருேம். சோழன் செங்களுனுக்கும், சேரன் கணக்கா லிரும்பொறைக்கும் ஏற்பட்ட போரில் சோழன் வெற்றி பெறுகின்ருன். சேர&னச் சிறைப்படுத்திக் காலில் விலங்கும் பூட்டுகின் றன். சேர வேந்தனின் ஆசிரியராகிய பொய்கையார் களவழி நாற்பது என்ற நூலைப்பாடிச் சோழனைச் சிறப்பிக்கின்ருர். இச்செய்தியை, - 20. தாழிசை.193. 22. தாழிசை-189. 21. தாழிசை-194. 23. தாழிசை-190.