உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

பசித்திடும் நாயைத் துண்ணில்
பலமாகக் கட்டிப் பார்க்கப்
புசித்திடு முணவைத் தட்டில்
போட்டெட்டா திடுதல் போன்று, -
வசித்திடும் வாழ்வாய் - வாட்டி
வருத்தவே றெதுவு மில்லை;
நசித்திடு வேன்நான்; நீபோய்
நாளைக்கு வாயிங்” கென்றேன்.

நானகத் துற்ற நோயும்
நவிலினித் தகைய தே;நீ
ரேனகத் திதனை யெண்ணா
திவ்வாறின் றியம்பல்? இல்லை,
கோனகத் துறும்ப சிக்கும்
குதிரையாள் பசிக்கும் பேதந்
தானகத் திதனை யுன்னித்
தவிர்க்கயித் தளர்ச்சி யென்றாள்.

துறக்கத்தி னாவ லாலால்
துறவியா யிற்றா? துன்பம்
பிறக்கத்தா னஞ்சிப் பேசிப்
பின்வாங்கிற் றா?இஃ தொன்றை
மறக்கத்தா னியலா வாறாய்
மலைபோன்று துயரம் மல்க,
வுறக்கத்தை யிழந்தே னுண்மை
யுரைத்தாற்ற மாட்டீ ரானீர்!

கல்லிலே தெய்வம் காட்டிக்
கைகூப்பச் செய்தோ ரும்,தம்
இல்லிலே யுள்ள பெண்ணின்
இதயத்தைப் புண்ப டுத்தார்!
சொல்லிலே சுவர்க்கம் காட்டும்
சூரர்நீ ரான தால்தான்,
புல்லிலே புலமை காட்டிப்
புலனைப்புண் செய்தீ ரென்றாள்.