உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


மாயிரு ஞால மெல்லாம்
மதிக்குமா றறங்கள் போற்றித்
தாயரும், தந்தை மாரும்
தத்தம்மக் கட்குங் காட்டி,
நோயரு காகா தொன்றி
நூறாண்டு காணும் நாடோ
ராயிர மாண்டாட் பட்ட
தந்நியர்க் கதுஇவ் வாறே!

உன்துன்ப மொருநாள் துன்பம்;
உள்ளதை யுரைப்ப தாயின்,
என்துன்ப மிருநாள் துன்பம்;
இவையொரு துன்ப மன்று;
தன்துன்பம் தானோ ராது
தாயகம் பட்டுத் தாழ்ந்த
முன்துன்பம், - அதனைப் புல்லால்
மூலம்நான் மொழிந்தே'’ ன்ன்றேன்.

சக்தியால் மனிதன் யாதும்
சாதிக்க மாட்டா னென்றே,
யுக்தியா லுருவங் கள்செய்
தொருநூறு பெயர்க ளிட்டு,
முக்தியால் சாந்தி யெய்த
முழுவதும் துறந்து மூண்டு
பக்திசெய் வீர்க” ளென்றே
பகர்ந்துபாழ் செய்தார் நாட்டை!

இரண்டன்றிங் கீச னொன்றே’
என்பவ னொருவன்; 'இல்லை;
இரண்டின்றி, யீசன், சீவன்;”
என்பவ னொருவன், "ஆமாம்!
இரண்டன்றிச் சடமு முண்டென்’
றியம்புவோ னொருவன்! இந்த
இரண்டொன்று மூன்றா லுற்ற
இன்னல்கட் கிலையா மெல்லை!