பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


தெருளுறச் செப்பின் தேரார்
தெய்வமென் றுரைப்ப தெல்லாம்
பொருளுறு காற்று, தீ,நீர்!
பொருத்தும்பே ரயன ரன்,மால்!
மருளறு மாறொன் றுண்டா?
மாந்தர்கள் மயங்கிப் போற்றின்,
இருளறுத் திவைக ளெவ்வா
றினியஅச் சுவர்க்க மேற்றும்?

நிலங்கொண்ட பொருள்மெய் யாகி,
நீலவான் கொண்டி யங்கும்
நலங்கொண்ட தட்ப வெப்பம்
நயங்கொண்ட காற்று மொன்றிச்
சலங்கொண்ட வுயிராய் நாமும்
சகத்தினி லுள்ளோம்! சாரும்
குலங்கொண்ட சிவ ராசிக்
குவலயக் கோட்பா டிஃதே!

மண்ணுக்குச் சேர்ந்த தெல்லாம்
மண்ணாகும்; மாய்ந்து போங்கால்
விண்ணுக்குச் சேர்ந்த தெல்லாம்
விண்ணாகும் விதியோ ராதார்,
கண்ணுக்குக் காட்சி யாகக்
கற்சிலை வைத்துக் காட்டிப்
பண்ணுக்குள் பதர்ப்பாட் டாக்கிப்
பணிந்திடப் பாட வைப்பார்.

சீவனுட் பரமாய்ச் சேர்ந்தும்,
சேராதும் காற்று, நீர்,தீ
மூவினப் பொருளும் வான
முறும்வெளிப் பரமாய்,- முற்றிச்
சாவென வந்தால், சீவன்,
சடம்தத்தம் மூலம் சாரும்!
ஆவன, - வாழ்வி லாற்றும்
'ஆன்மிக மதுவொன் றுண்டே!