பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


’முரசுகள் முழங்க முற்றி
மூண்டுபோ ரிட்டு வெல்லும்
அரசர்கள் படைப லம்மற்
றநித்திய பலமே! ஆயின்,
துருசிலா வுளத்தி லுண்மை
துலங்கிடத் துணிந்து வாழும்
பரசுக பலமே பண்புப்
பல’ மெனப் பகர்வ துண்டு!

’சிற்குணத் தவர்க ளாலும்
தெரிவதற் கரிய தெய்வம்
எற்குணர்த் தரிய தேனும்,
எண்ணிய மூன்ற னுள்ளும்
முற்குணத் தவரே போற்றும்
முதல்வரா வதனால் நாமந்
நற்குணக் கடலி லாடல்
நலமெ’ன்ற கம்பன் நாடி,

‘மெய்த்திருப் பதத்தை நீயே
மேவுக’, என்ற போதும்,
’இத்திருத் துறந்து கானிற்
கேகுக!, என்ற போதும்,
சித்திரத் திலங்கா நின்ற
செய்யசெந் தாம ரைப்பூ
வொத்தொளிர் முகத்தைச் சீதை
யுன்னினா ளென்றா னன்றே!

பாவலன் படைத்து வைத்த
பாத்திர மதனில் பெய்த
ஆவலை மேவச் செய்யும்
அரும்பெருங் குணத்தை யாயா
நாவலன் நறுநெய் நீக்கி
நாழியைக் கொண்ட தாக்கிக்
கோவிலில் சிலையைப் போற்றிக்
கொண்டாடச் செய்தான், நாட்டில்!