உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


என்னைநா னீந்து, மற்றென்
ஈகைக்குக் கைம்மா றாகத்
தன்னைத்தா னெனக்கு நல்கத்
'தம்பதி' யெனவே தங்கி,
முன்னையும் பின்னு மில்லா
முறையினி லூரைப் பேணும்
அன்னையும், அப்ப னாயும்
அவனியில் வாழ்வே' மென்றே.

'எண்ணறக் கற்றுச் சால
எழுத்தற வாசித் தாலும்,
பெண்ணறி வென்ப தென்றும்
பேதமைத் தெனவே பேசி,
மண்ணினில் மகளிர் மாண்பு
மணமறு மாறு செய்த
திண்ணிய னைப்பெற் றாளித்
தேசத்தி லொருபெண் தானே.

சேலான விழிக்கோ, சேர்ந்த
சிற்றிடை தனக்கோ, செம்மை
மேலான, - மிடுக்கு மிக்க-
மென்றளிர் மேனிக் கோ,என்
தோலாத துாய உள்ளம்
தோற்றிட வில்லை! தோகை
நீலாவின் உண்மை யன்பு
நெறியன்றோ வென்ற தென்னை!

நோற்றவள் நீலா வன்று;
நுணுகியா ராயின், நொந்து
சேற்றிலே கிடந்த என்னைச்
செந்தளிர்க் கைகொ டுத்துப்
பேற்றிலே பெரும்பே றெய்திப்
பேணவே எடுத்தாள்; பேரா
தாற்றிலே அண்மந்து சால
அருமையாய் நோற்றோன் நானே!