உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

 
குளிக்கவோ, வெளுக்க வோவூர்க்
குமரிகள் குழுமிக் கொட்டி
யளக்கவோ,— அந்தி சந்தி
யாற்றுக்கு வந்தே தீர்வர்!
‘அளிக்குவே றசை மூட்டற்
கரவிந்தம் மலர்ந்த’ தென்னக்
களிக்கவே காணும் கள்ளக்
கன்னிக்கண் கரைமீ தேகும்!

மந்தமா ருதமும் மாந்தி,
மன்மத னெனவே மாறிச்
சிந்தையைச் சிதறச் செய்துச்
‘செல்வத்தின் சிறப்பிஃ’ தென்ன
விந்தையாய் விளங்கா நின்ற
வெறிகொண்ட காட்டு வேங்கை—
இந்தவூர் தனையாட் கொள்ளும்
இளஞ்சீமான் , தருவான் காட்சி!

பன்னிப்பன் னிச்சொன் னலும்
பகர்ந்ததைப் படியா மூடன்,
‘கன்னிப்பெண் மணிக ளுன்னைக்
கடைக்கணிக் கின்ரு’ ரென்று
தன்னப்பன் தானே யென்னத்
தாறுமா றக்க வந்திப்
பொன்னப்ப னின்றிங், கென்மேல்
பொல்லாப்பைப் போட்டுப் போனன்.

சதிமோசம் செய்தி டாநற்
சான்றேன்சொன் னன மன்றே:
‘மதிமோச மாய்வி டாத
மானிகள், மனையின் மாட்சிக்
கதிமோசங் கண்டி டாத
கன்னிகள் கண்க லங்கப்
பதிமோசம் செய்யப் பாவிப்
பையனப்ப் பிறந்தா’ னென்றே!

2