உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22



7. வேண்டுகோள்

ஆற்றுக்கங் கருகில் சாலை;
அரிசனச் சேரி யோரம்;
காற்றுக்கும் வெயில்ம ழைக்கும்
காப்பான சாழை யில்,நான்
சோற்றுக்கா ளாதல் தப்பிச்
சுவர்க்கத்தைப் படைக்க வுள்ளேன்!
நூற்றுக்க ணக்கில் நாளும்
நூல்களை நுணுகி யாய்ந்தே!

முல்லையி னரும்பு மொன்றி
மோகன மதியில் மூழ்த்துக்
‘கல்லினில் செதுக்கிக் கன்னிக்
கவினைக்கண் காண வைக்கக்
கொல்லியில் கொண்ட பாவை
குச்சிலில் குந்திற்’ றென்ன,
அல்லியும் தன்கை கூப்பி
அருகில்வந் தமர்ந்தா ளன்றே!

நெல்லாருங் கழனி, தோப்பு,
நிறைமனைச் செல்வக் கன்னி,—
நல்லோரும், நலிவுற் றேரும்,
நங்கையின் நலத்தை நாடும்
எல்லாரும் ‘இவளே தெய்வம்’
என்னுமா றெழில்மி குந்து
சொல்லாரும் புகழ்ந்து சொல்லச்
சொக்கவே வைக்கும் தோற்றம்!

“பஞ்சினல் பாதம்; பச்சைப்
பசுங்கிளிப் பவள வாய்;வான்
மஞ்சினல் மறைந்து காணும்
மதிமுகம்! மலர்போன் மேனி;
நஞ்சினல் விழியும், நல்ல
நறவினல் மொழியும் வாய்த்துக்
கெஞ்சினல் மிஞ்சும் வஞ்சீ!
கேட்பது முளதோ?” என்றேன்.