பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

“காவீட்டும் நொய்ய லாற்றங்
கரைக்கவின் கனியும் குச்சில்
நாவாட்ட மட்க்கி நானும்
நாடொறும் வந்தி ருந்து
மாவாட்டிக் குப்பை கூட்டி
மலர் போன்று தோசை, பச்சி, —
பாவூட்டு முமக்கு மாறய்ப்
பரிமாற வேண்டு” மென்றள்.

“கொல்லையில் நட்டுக் கொண்ட
குழந்தைபோல் காத்துத் தண்ணிர்
தொல்லையில் லாம லூட்டும்
தோட்டக்கால் பூவன் கன்றைப்
புல்லயில் புதர்சூழ்ப் பொட்டல்
புன்செயில் நடப்போ யின்மற்
றெல்லையில் லாத தொல்லைக்
கிடையது கெடல்மெய் யல்லீ!

‘ஆந்தையின் பொந்திற் குள்வந்
தஞ்சுகம் குந்திற்’ றென்றும் ,
‘ஓந்தியி னுறவு கொண்டிவ்
வூர்ப்பல்லி யுறையு’ தென்றும்
வாந்தியை யெடுத்தூ ராள்வோன்
வழியெல்லாம் நாறச் செய்தென்
சாந்தியைக் கெடுத்து வைப்பான்,
சாமத்துப் பூவே! சாற்றின்.

காவலில் லாத காட்டில்
கவினகைப் பறந்து, காணும்
நாவலின் கனி,கொய் யா, மா,—
நசைதீரத் தின்றூ ராளும்
சேவலின்! சதியாய் நீபோய்ச்
சேர்ந்தின்பம் துய்க்கா தே, சீ!
கேவலம் குச்சில் வேட்டுக்
கிளிபுகல் கூடா” தென்றேன்.